‘இந்தியன் 2’ திரைப்படத்தின் Intro-வை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்
INDIAN-2 AN INTRO: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் INTRO வீடியோவை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்தியன் 2 படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன்2’ படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 திரைப்படம்:
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது, இந்தியன் 2 திரைப்படம். இந்த படத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த படத்தின் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. இதுவரை படத்தின் போஸ்டர்களும், அவ்வப்போது சில வீடியோக்களும் வெளிவந்துள்ளன. ஆனால் அதை தவிர்த்து படம் குறித்த எந்த அப்டேட்களையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. அதேபோல் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை OTT நிறுவனமான நெட்ஃபிக்ஸ் பரபரப்பான விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமை 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோலிவுட்டில் அனைவரும் மிக ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இந்தியன் 2 ஆகும். தற்போது இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தியன் 2 படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7: எவிக்ட் ஆன யுகேந்திரன்-வினுஷாவிற்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்தியன் 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோ:
இந்த நிலையில் தற்போது வரும் நவம்பர் 7 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) பிறந்தநாள் கொண்டாட உள்ளதால், அதையொட்டி இன்று இந்தியன் 2 (Indian 2) திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்ய உள்ளார்.
மேலும் தமிழில் மட்டுமல்லாது மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப்பும், தெலுங்கில் இயக்குநர் ராஜமௌலியும், இந்தியில் நடிகர் அமீர்கானும் வெளியிட்டனர். இந்த இந்தியன் 2 வீடியோவில் நாட்டின் தற்காலத்தில் ஊழல் அதிகரித்துள்ளது போலவும் அதனால் சேனாதிபதி இந்திய நாட்டிற்குத் திரும்புவது போலவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் இரண்டாவது திரைப்படமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
இந்தியன் 3 எப்போது:
அதேபோல் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமும், இதன் மூன்றாம் பாகம் ‘இந்தியன்3’ அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் மூன்றாவது பாகத்திற்காக நடிகர் கமல்ஹாசன் கூடுதலாக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ