ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: காரணம் இதுதான்
அண்ணாத்த படப்பிடிப்பு நல்ல வேகத்தில் நடந்து கொண்டிருந்ததால், தற்போது வந்துள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பிற நடிகர்களின் நடிப்பில் எடுக்கப்பட்டு வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வந்தது. இதற்காக நடிகர்கள் அனைவரும் ஹைதராபாத் சென்றிருந்தனர்.
விரைவில் படப்பிடிப்பை முடிக்க ரஜினிகாந்த் ஒரு நாளில் 14 மணி நேரம் பணிபுரிந்தார் என செய்திகள் வந்தன. எனினும், படப்பிடிப்பு குழுவில் 7 உறுப்பினர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
படப்பிடிப்பு நல்ல வேகத்தில் நடந்து கொண்டிருந்ததால், தற்போது வந்துள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குழு உறுப்பினர்கள் 7 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக, படப்பிடிப்பை ரத்து செய்ய குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் (Rajinikanth) இன்று மாலை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு தொற்றுநோயையும் தடுக்கும் வகையிலான பயோ பாதுகாப்பு குமிழியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், தற்போது வந்துள்ள செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ALSO READ: பிசாசு 2 படத்தின் first look-க்கும் Andrea-வுக்கும் இப்படி ஒரு connection இருக்கா?
தொற்றின் அபாயத்தைத் தடுக்க படக்குழு முழுமையான உட்புற படப்பிடிப்பு முறையை தேர்வு செய்திருந்ததது என்பது குறிப்பிடத்தக்கது. அன்ணாத்த (Annaatthe) படக்குழு ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தி வந்தது. 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தும் ஏற்பாட்டுடன் அனைத்து பணிகளும் திட்டமிடப்பட்டிருந்தன.
அண்ணாத்த படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாரா (Nayanthara), கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இமான் படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது படக்குழுவில் 7 பேருக்கு கொரோனா வைரS (Coronavirus) தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, படக்குழுவும் ஆடிப்போயுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 45 நாள் படப்பிடிப்பில் படத்தின் பெரும்பாலான பணிகள் திட்டமிடப்பட்டிருந்ததால், எதிர்பாராமல் வந்துள்ள இந்த தடை அனைவருக்கும் ஏமாற்றத்தையும் கலக்கத்தையும் அளித்துள்ளது.
ALSO READ: கொரோனா தொற்றால் ரகுல் ப்ரீத் சிங் பாதிப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR