Rajinikanth Lal Salaam OTT Release Date and Streaming Platform: ரஜினிகாந்த் கேமியோ ராேலில் நடித்துள்ள திரைப்படம், லால் சலாம். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டார் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லால் சலாம் திரைப்படம்:


லால் சலாம் படத்தில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம், கடந்த 9ஆம் தேதி (பிப்ரவரி) வெளியளாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. ரஜினி, இதில் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கேமியோ ரோலாக இருந்தாலும் இவருக்கு இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 


தனுஷ் நடிப்பில் வெளியான 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மூன்றாவதாக லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை வைத்து நடத்தப்படும் மத அரசியலை வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம், வெளியான முதல் நாளில் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 


எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது? 


தற்போது வெளிவரும் படங்கள் அனைத்துமே டிஜிட்டல் ஓடிடி தளங்களால் வாங்கப்பட்டு விடுகின்றன. படம் வெளியாகி ஒரு மாதம் ஆவதற்குள், எந்த ஓடிடி தளத்தில் எந்த படத்தை எப்படி பார்க்கலாம் என்ற விவரங்களையும் அறிவிப்பாக வெளியிட்டு விடுகின்றன. அந்த வகையில், லால் சலாம் படமும் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


லால் சலாம் படத்தின் டிஜிட்டல் உரிமையினை, நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளது. இப்படம் எப்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது என்பது குறித்த அறிவிப்பு, இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல்:


லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, முதல் நாளில் இப்படம் உலகளவில் ரூ.4 காேடி வரை கலெக்ட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாம் நாளில், மொத்தம் சுமார் 3 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | புதுப்படத்தில் கமிட் ஆன பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி! அதற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு?


படத்தின் விமர்சனம்..


‘லால் சலாம்’ திரைப்படத்தில் மத அரசியல் குறித்து பேசியுள்ள கருத்துகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. கூற வந்த கருத்தை இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் நேர்த்தியுடன் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்திருந்தனர். முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதாகவும், ரஜினியின் எண்டிரிக்கு பிறகு படம் சூடு பிடிப்பதாகவும் கருத்துகள் எழுந்தது. 


ரஜினிகாந்தின் சம்பள விவரம்..


நடிகர் ரஜினிகாந்த், ஒரு படத்திற்கு ரூ. 250 கோடிக்கு குறைவாக சம்பளம் வாங்குவதில்லை எனக்கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும், ‘தலைவர் 171’ படத்திற்காக இவர் ரூ.260 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ.40 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Thalaivar 171: லோகேஷ் - ரஜினி படத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ