Thalaivar 171: விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து அடுத்த படத்தை எடுக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
லியோ படம் வெளியான பின்பு சிறிது நாட்கள் ஓய்வில் இருந்த லோகேஷ் கனகராஜ், மீண்டும் தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது, படத்தில் அதிக ரத்தம் இருக்கும் ஆக்சன் காட்சிகள் வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆக்சன் படங்களுக்கு பெயர் போன லோகேஷ் கனகராஜ் இடம் ரஜினிகாந்த் இப்படி சொல்லி இருப்பதால் லோகேஷ் அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இப்படம் ஒரு ஆக்சன் படமாக தான் உருவாகி வருகிறது.
தற்போது வகை ரெடியாகி உள்ள கதையில் ரஜினிக்கு முழு திருப்தி இல்லை என்றும் கூறப்படுகிறது, மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜன் சினிமாடிக் யுனிவெர்சில் இருக்காது என்றும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமான கூறப்பட்டுள்ளது.