Thalaivar 170 Updates: பரட்டை என்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படமான "தலைவர் 170" படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. கேரளாவில் தொடங்கிய "தலைவர் 170" படத்தின் படப்பிடிப்பு, பின்னர் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 25 அன்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பக்கத்தில், அமிதாப்பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது நெகிழ்ச்சியான தருணத்தை குறிப்பிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது -ரஜினிகாந்த் நெகிழ்ச்சி


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பதிவில், "லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 170' படத்தில், 33 வருடங்களுக்கு பிறகு என்னுடைய வழிகாட்டி அமிதாப்பச்சனுடன் மீண்டும் இணைகிறேன். எனது மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது" எனப் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.



மேலும் படிக்க - ரஜினியின் கடைசி படம் இதுதானா..? ரகசியத்தை பகிர்ந்த பிரபல இயக்குநர்..!


ரூ.650 கோடிக்கு மேல் வசூல் செய்த 'ஜெயிலர்'


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்'படத்தில் நடித்தார். இது உலகம் முழுவதும் ரூ.650 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. பெரிய பட்ஜெட் உருவாகி வரும் இந்த படம், கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும் என்று கூறப்படுகிறது.


தலைவர் 170 படத்தின் நடிக்கும் நடிகர்கள்


தலைவர் 170 படத்தின் ஏராளமான முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர். ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரக்ஷன் மற்றும் ஜிஎம் சௌந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். 


தலைவர் 170 படத்தின் தொழில்நுட்பக் குழு


லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை டிஜே ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதி செக்கிறார். எடிட்டர் பணியை பிலோமின் ராஜ் கவனித்துக் கொள்கிறார்.


மேலும் படிக்க - விஜய்யா? ரஜினியா? தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ