ரஜினியின் கடைசி படம் இதுதானா..? ரகசியத்தை பகிர்ந்த பிரபல இயக்குநர்..!

Rajinikanth Last Movie: நடிகர் ரஜினிகாந்தின் கடைசி படம் குறித்த தகவலை லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Oct 15, 2023, 03:58 PM IST
  • ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
  • இதுதான் ரஜினியின் கடைசி படம் என கூறப்படுகிறது.
  • இது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
ரஜினியின் கடைசி படம் இதுதானா..? ரகசியத்தை பகிர்ந்த பிரபல இயக்குநர்..!  title=

தமிழ் திரையுலகம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகினராலும் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 47 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக நிலைத்து நடிகராக இருக்கிறார். இவர் நடிக்கும் கடைசி படம் குறித்து எப்போதும் ரசிகர்களுக்கு சந்தேகம் எழுவது வழக்கம். 

தலைவர் 171:

கோலிவுட் திரையுலகில் சில படங்களையே இயக்கி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் ‘நல்ல இயக்குநர்’ என்ற இடத்தை பிடித்துள்ளவர் லோகேஷ் கனகராஜ். தற்போது, இவர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து அவர் இயக்கும் படம், ‘தலைவர் 171’. ரஜினியை ஹீரோவாக வைத்து இவர் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படம் வெளியாக உள்ள நிலையில், இப்படம் குறித்த நேர்காணல் நிகழ்ச்சிகளில் லோகேஷ் கலந்து காெண்டு வருகிறார். 

இதுதான் கடைசி படமா..? 

நடிகர் ரஜினிகாந்திற்கு தற்போது 72 வயதாகிறது. ரஜினிக்கு வயதாகி விட்டது என்று நினைக்கும் ரசிகர்கள் அவர் கமிட் ஆகும் படங்களை எல்லாம் கடைசி படம் என்று நினைத்து கொள்கின்றனர். அதனால், அவர் நடிக்கும் புது படம் குறித்த அப்டேட்டுகள் வரும் போதெல்லாம் அதை ரசிகர்கள் அவரது கடைசி படம் என்று கூறுவதுண்டு. அப்படித்தான், ‘தலைவர் 171’ படத்தின் அப்டேட் வரும் போதும் கூறினர். இதற்கு லோகேஷ் கனகராஜ் தான் கலந்து கொண்ட நேர்காணலில் விளக்கம் கொடுத்துள்ளார். 

Thalaivar 171

அவரிடம், ‘தலைவர் 171’ படம்தான் ரஜினிகாந்தின் கடைசி படமா என் கேள்வி கேட்க, அதற்கு அவர் “கண்டிப்பாக இப்படம் அவரது கடைசி படம் அல்ல” என்ற பதிலை கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

மேலும் படிக்க | தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?

லால் சலாம்:

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளி வர இருக்கும் படம், லால் சலாம். இப்படத்தில் அவர் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் ரஜினியின் பெயர் மொய்தீன் பாய். இந்த படத்தை ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

தலைவர் 171 குறித்து லோகேஷ் கனகராஜ்:

தமிழ் சினிமாவில் புதிதாக எல்.சி.யு எனும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்டை இறக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் இநத் எல்.சி.யுவில் ஏற்கனவே கைதி, விக்ரம் ஆகிய படங்களை இணைத்துள்ளார். அடுத்து வெளிவர இருக்கும் லியோ படமும் இந்த எல்.சி.யுவின் ஒரு அங்கமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், தலைவர் 171 படமும் எல்.சி.யுவை சேர்ந்ததா என்று லோகேஷிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கண்டிப்பாக இப்படம் தனியான படம் என்றும் இதற்கும் எல்.சி.யுவிற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறினார். 

மேலும் படிக்க | லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News