தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளி வந்ததிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரஜினி (Rajinikanth) கிராமத்து கதைகளில் கலக்கும் சிவாவுடன் கூட்டணி வைத்ததால் இந்த எதிர்பார்ப்பு எழுந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருந்த இந்த (Annaatthe) படம், பின்பு வேறு தேதிக்கு மாற்றலாமா என்ற பேச்சு எழுந்தது. கடைசியில் தீபாவளி தினத்தில் வெளியாவது உறுதி என்று படக்குழு அறிவித்தது. கடந்த வாரத்தில் இமான் இசையில் அண்ணாத்த திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.


ALSO READ | முறுக்க, கொதிக்க, தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்


இதனையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியானது. கிராமத்தானை குணமாதான பாத்து இருக்க, கோவப்பட்டு பாத்தது இல்லயே என்று தொடங்கும் இந்த டீசர் முழுக்க முழுக்க ராஜியை மையப்படுத்தியே உள்ளது. இத்திரைப்படம் ஒரு பேமிலி எண்டர்டெயினர் என்று தகவல்கள் வெளிவந்தாலும் படக்குழு இதனை ஆக்சன் திரைப்படமாகவே காட்டுகிறது. படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்களை காட்டாமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளார் இயக்குனர் சிவா. 


இந்நிலையில் தற்போது தனது மகள், மருமகன் பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அண்ணாத்த படத்தை பார்த்த ரஜினியின் பேரன் அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் HOOTE APP மூலமாக தனது சொந்த குரலில் பதிவி செய்துள்ளார்.


 



 


 



 


ரஜினிகாந்த்தின் மகளான சௌந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய HOOTE என்கிற APP-ஐ உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR