தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் நடைபெறும் வேட்டையன் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் வாகைக்குளம் விமான நிலையம் வந்து ஆரல்வாய்மொழி சென்றார்.  நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது படமான வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். சென்ற மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அப்படியே அசினை உரித்து வைத்திருக்கும் அவரது மகள்! போட்டோவை பார்த்துள்ளீர்களா?


படத்தின் சில காட்சிகள் எடுக்க உள்ள நிலையில் திரைப்பட படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கே நடிகர் ரஜினிகாந்த்தை காண நூற்றுக்கணக்கான ஆண் பெண் ரசிகர்கள் கூடியிருந்தனர். இதை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கைகூப்பியபடி சென்றார். இதை அடுத்து ரசிகர்கள் ஆரவாரமாக தலைவா என கூச்சலிட்டனர், பின்னர் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கார் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரி மாவட்டம் சென்றார்.



லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் ரஜினியின் 170வது படத்தின் அவரின் பிறந்தநாள் அன்று டீசருடன் தலைப்பு வெளியானது.  சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய புத்தகத்தை ரஜினி வாசிக்கும் காட்சியுடன் வீடியோ தொடங்கியது. அனிருத்தின் பின்னணி இசையில் டீசர் இருந்தது.  மேலும், சன்கிளாஸைப் பிடித்துக்கொண்டு, துப்பாக்கியை ஏந்தியபடி, “வேட்டையாடும்போது, ​​இரை விழ வேண்டும்” என்று டயலாக் பேசி இருந்தார்.  வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன், ஜி.எம்.சுந்தர், ரோகினி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்ஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  அடுத்த ஆண்டு சம்மர் விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 


மேலும் படிக்க | DD3: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருந்த படத்தை இயக்கும் தனுஷ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ