புதுடெல்லி: இந்த ஆண்டு தீபாவளி ரிலீசான இரு படங்கள் கொரோனாவுக்கு பின்பு திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகியுள்ளன. ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தமிழ் படம் 'அண்ணாத்த'. மற்றொன்று பாலிவுட் திரைப்படமான 'சூர்யவன்ஷி'.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டில் ஹிட்டான அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள சூரியவன்ஷி திரைப்படத்தின் சாதனையையும் ஓரங்கட்டி, சாதனையை பதிவு செய்துள்ளது ரஜினியின் அண்ணாத்த.  இரண்டு திரைப்படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் அதிசயங்களைச் செய்தாலும், ரேஸில் முந்தியது சூப்பர் ஸ்டார் தான்.


இரண்டு படங்களும் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளன தெரியுமா?  
அக்‌ஷய் குமார் மற்றும் கத்ரீனா கைஃப் நடித்த 'சூர்யவன்ஷி' திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தாலும், ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் வசூலுக்கு முன் அது மண்டியிட்டுவிட்டது.



இரு திரைப்படங்களும் வெளியான முதல் மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை, வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜேபாலன் தனது ட்வீட்டில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அண்ணாத்த திரைப்படம் ரிலீசான முதல் 3 நாட்களில் 174.73 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பாலிவுட்டின் தீபாவளி ரிலீசான 'சூர்யவன்ஷி' 77.24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.



அக்‌ஷய் குமார் நடித்த ‘சூர்யவன்ஷி’ படத்துக்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியதும் வசூல் பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பஞ்சாபின் ஹோஷியார்பூர் உள்ளிட்ட பல இடங்களில் திரையரங்களில் சூரியவன்ஷி வெளியீடு  நிறுத்தப்பட்டது. இது படத்தின் வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. ஆனால், தீபாவளிக்கு வெளியான இப்படம் முதல் நாளில் 26.38 கோடிகளையும், இரண்டாவது நாளில் 24.53 கோடிகளையும் வசூலித்துள்ளது.



ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் வசூல் ரீதியாக இதுவரை பதிவான அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. அண்ணாத்த விசுவரூபம் எடுத்து, வசூலில் பட்டையை கிளப்புகிறார். 'அண்ணாத்த' முதல் மூன்று நாட்களிலேயே வசூல் ரீதியாக தன்னை நிரூபித்து புதிய சாதனை படைத்துள்ளது.


READ  ALSO | அண்ணாத்த திரைப்பட விமர்சனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR