நயன் - விக்னேஷ் சிவனுக்கு தாலி எடுத்துக்கொடுத்தாரா ரஜினிகாந்த்?
நயன்தாரா திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐயா படம் மூலம் அறிமுகமாகி பல ஏற்ற இறக்கங்களையும், பலரால் விமர்சனங்களையும் சந்தித்த நயன்தாரா தமிழ் சினிமாவின் நடிகையாக இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நீண்ட நாள்கள் காதலில் இருந்தார்.
இவர்களது திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி மகாபலிபுரத்தில் இருக்கும் ஷெராட்டன் கிராண்ட் ரெசார்ட்டில் நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்தது.
ரஜினி, ஷாருக் கான், போனி கபூர், மணிரத்னம், சூர்யா, கார்த்தி என பாலிவுட் கோலிவுட் முதல் பாலிவுட் ஸ்டார்ஸ்வரை வருகை தந்து இருவரையும் வாழ்த்தினர்.
இந்நிலையில் இவர்களது திருமணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ரஜினிதான் விக்னேஷ் சிவனுக்கு தாலி எடுத்து கொடுத்தார் என நயன் - விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
நயன்தாரா ரஜினியுடன் சந்திரமுகி, தர்பார், அண்ணாத்த, குசேலன் உள்ளிட்ட படங்களிலும், சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கும் சேர்ந்து நடித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR