வீடியோ: என்னை புறக்கணிக்க வேண்டாம்; வலியால் அழும் நடிகை ராக்கி சாவந்; கணவர்?
என்னை புறக்கணிக்காதீர்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். என் நிலை குறித்து கொஞ்சம் பரிதாபப்படுங்கள் என கணவரிடம் நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.
புதுடெல்லி: சர்ச்சைகளின் ராணி என்று பிரபலமாக அறியப்பட்ட பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தின் கணவரின் முகம் கூட இன்னும் யாரும் பார்க்கவில்லை. ஆனால் அவர்களது திருமணம் முறிந்ததற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளன. கடந்த மாதம், ராக்கி சாவந்தின் திருமண படங்கள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது அவரின் திருமண வாழ்க்கை குறித்து சில வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அந்த வீடியோவில் அவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று விவரிக்கின்றன.
தற்போதைய சூழலில் ராக்கி சாவந்த் (Rakhi Sawant) எந்த திரைப்படத்திலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் காணப்படுவதில்லை. ஆனால் அவர் சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக ஆதிக்கம் செலுத்துகிறார். எப்போதும் மகிச்சியாக காணப்படும் ராக்கி சாவந்த், தற்போது அவரின் அழுகை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ராக்கி சாவந்த் தனது வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது கணவரைக் குறித்து பேசியுள்ளார். இந்த வீடியோவைப் பாருங்கள்…
இந்த வீடியோவில், நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்வேன். அதை நான் கண்டிப்பாக கேட்பேன். நீங்கள் நினைப்பது போலவே நான் இருப்பேன். என்னை புறக்கணிக்காதீர்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். என் நிலை குறித்து கொஞ்சம் பரிதாபப்படுங்கள். என் வலி உங்களுக்கு புரியவில்லையா? என்னை விட்டு செல்லாதீர்கள் என அழுகையுடன் கணவரிடம் கெஞ்சும் நடிகை ராக்கி சாவந்த்.
இது மட்டுமல்லாமல், இந்த வலியை எல்லாம் விவரிக்கும் போது ராக்கி சாவந்த் பயங்கரமாக அழுவதைக் காணலாம். இந்த வீடியோவை ராக்கி சாவந்தின் கணவர் பார்த்தாற? என்று தெரியவில்லை.