‘பாசமலர்’ படத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படம் வரை, பலவற்றில் நாம் அண்ணன்-தங்கை பாசத்தை பார்த்துவிட்டோம். இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதை ஒட்டி, சகோதர-சகோதரி பாசத்தை வெளிப்படுத்திய தமிழ் படங்களின் லிஸ்டை பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.பாசமலர்:


அனைத்து திருமண விழாக்களிலும், மணப்பெண்ணிற்கு ஒரு சகோதரன் இருந்தால் காமெடியாகவோ அல்லது சீரியசாகவோ கூறப்படும் டைலாக், “என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கிறேன்..” இந்த வசனத்தை பாசமலர் படம் பார்த்ததில் இருந்து பலர் உபயோகப்படுத்துகின்றனர். 1961ஆம் ஆண்டு வெளியான ‘பாசமலர்’ படத்தில் சிவாஜி கணேசன் அண்ணனாகவும், சாவித்ரி தங்கையாகவும் வாழ்ந்திருப்பர். “மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்..” பாடல் பல அண்ணன் இல்லா தங்கைகளுக்கு தாலாட்டு பாடலாக அமைந்துள்ளது. படம் வெளியாகி அரை நூற்றாண்டு ஆகியிருந்தாலும் இன்றும் தமிழ் சினிமாவின் சகாேதர பாசத்தின் ட்ரேட் மார்க் படமாக உள்ளது, பாசமலர். 


மேலும் படிக்க | தனி ஒருவன் 2 அப்டேட்.. மிகப்பெரிய ட்விஸ்ட்டுடன் வீடியோ வெளியீடு


2.திருப்பாச்சி:


அண்ணன்-தங்கை பாசத்திற்கு பெயர் போன மற்றுமொரு படம், திருப்பாச்சி. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு ஆக்ஷன்-கமர்ஷியல் படம் போல தோன்றினாலும் இதில் அண்ணன்-தங்கை பாசத்தையும் அழகாக காண்பித்திருப்பர். விஜய், ‘சிவகிரி’ எனும் கதாப்பாத்திரத்தில் அண்ணனாகவும் அவருக்கு தங்கையாக ‘கருப்பாயி’ எனும் கேரக்டரில் மல்லிகாவும் நடத்திருப்பர். தங்கைக்காக ஒரு அண்ணன் எதுவும் செய்வான் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்படத்தின் கதையம்சம் இடம் பெற்றிருக்கும். இப்படம் 175நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு, ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 


3.சிவப்பு மஞ்சள் பச்சை:


அக்கா-தம்பி கதைகளை உலகிற்கு கூறிய படங்கள், நம்ம ஊர் சினிமாவில் மிகவும் குறைவு. அப்படி முத்தான கதையுடன் வெளிவந்த கதைகளுள் ஒன்று, சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த படத்தில் வரும், “ஆழி சூழ்ந்த உலகிலே இனி யாவும் அழகாச்சே..” பாடல் அவ்வளவு அழகு. தற்போது நடைபெறும் பல திருமண விழாக்களில் இந்த பாடல் கண்டிப்பாக ஒளிபரப்ப படுகிறது. அக்காவாக லிஜோமோல் ஜோஸ் ‘ராஜலக்ஷமி’ எனும் கதாப்பாத்திரத்தில் நடத்திருப்பார். அவருக்கு தம்பியாக ‘மதன்’ எனும் கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருப்பார். உங்கள் தம்பி மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்த நினைத்தால், இந்த படத்தை அவருடன் அமர்ந்து பாருங்கள். 


4.கடைக்குட்டி சிங்கம்:


கார்த்தி நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம், ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்த படத்தில் குணசிங்கம் கதாப்பாத்திரத்தில் வரும் கார்த்திக்கு மொத்தம் 5 அக்காக்கள். இவர்களால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், தன் அக்காக்களின் மனம் நோகாமல் கார்த்தி அவற்றை சமாளிக்கும் விதம், ஆகியவையே படத்தின் கதை. பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த படம், 100 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றி பெற்றது. 


5.நம்ம வீட்டு பிள்ளை:


கோலிவுட்டின் செல்லப்பிள்ளையாக மாறி வரும் சிவகார்த்திகேயன் நடித்திருந்த படம், நம்ம வீட்டு பிள்ளை. 2019ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். “எங்க அண்ணன்..அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்..” பாடல், இன்று பல சகோதரிகளின் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸாக வைக்கப்பட்டுள்ளது. அதே போல,  “உன் கூடவே பொறக்கனும்..” பாடலை பல அண்ணன் மார்கள் தங்கள் தங்கைகளுக்காக டெடிக்கேட் செய்வதும் வழக்கம்.  “ஆயிரம்தான் அடித்துக்கொண்டாலும் கடைசில அண்ணன்னா..அண்ணன்தான்..” என்பது போன்ற சகோதர-சகோதரி பாசத்தை இந்த படத்தில் காண்பித்திருப்பர். இந்த படத்தில் அண்ணன்-தங்கையாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்-சிவாகர்த்திகேயன் உண்மையாகவே சகோதர பாசத்துடன் பழக ஆரம்பித்து விட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விஜய்க்கு துரோகம் செய்த திரிஷா? ஒரு போட்டோவால் சிக்கிக்கொண்ட அவலம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ