ராமராஜன் படத்திற்கு அமெரிக்காவிலும் எதிர்பார்ப்பு... வாய் பிளந்த கோலிவுட்
ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சாமானியன் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
தமிழ் சினிமாவில் 80களின் மத்தியிலும், 90கள் ஆரம்ப காலகட்டத்திலும் கோலோச்சியவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் ஹாசன், விஜயகாந்த் என டாப் ஸ்டார்களுக்கு இணையாக ராமராஜனுக்கும் ரசிகர்கள் இருந்தனர்.மேலும், அவர்களின் படம் எந்த அளவு வசூல் செய்ததோ அதே அளவு வசூலையும் ராமராஜனின் படங்கள் வசூலித்தன. கிராமத்து மண் வாசனையோடு, கிராமத்திலிருந்து ஒருவர் நடிக்க சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் ராமராஜனின் நடிப்பு. அதுமட்டுமின்றி சோலோவாக 45 படங்கள் ஹீரோவாக நடித்தவரும் அவரே. ராமராஜனின் படங்களிலேயே பெஞ்ச் மார்க் படமாக இருப்பது கரகாட்டக்காரன். தில்லானா மோகனாம்பாள் படத்தின் கிராமத்து வெர்ஷனாக உருவான அப்படத்தை கங்கை அமரன் இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைப்பில் ராமராஜன், கனகா, வாகை சந்திரசேகர், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு அந்தப் படமானது வெளியானது.
இசை, திரைக்கதை, காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் சிறிதுகூட பிசகில்லாமல் மாபெரும் வெற்றியடைந்தது. அந்தப் படத்திற்கென இன்றளவும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
கரகாட்டக்காரனுக்கு அடுத்து அவர் நடித்த வில்லுப்பாட்டுக்காரன் உள்ளிட்ட படங்களும் வெற்றியடைந்தன. அதன் பிறகு அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்த ராமராஜன் அதிலிருந்தும் ஒருகட்டத்துக்கு மேல் ஒதுங்கிவிட்டார்.
இப்படிப்பட்ட சூழலில் ராமராஜன் ‘சாமானியன்’ என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆர்.ராகேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | பாபா ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல்... அப்செட்டில் ரஜினி?
இந்நிலையில் சாமானியன் படம் குறித்து பேசிய ராதாரவி, “இந்தப் படத்தில் எனக்கு, ராமராஜன், எம்.எஸ்.பாஸ்கர் 3 பேருக்கும் இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. நல்ல சப்ஜெக்ட் இது. தமிழ் படங்களில் இது புது சப்ஜெக்ட். இந்தபடத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நான் அமெரிக்காவில் இருக்கும்போது அங்கிருக்கும் சிலர் கூட என்னிடம் படம் எப்போது வெளியாகும் என கேட்டார்கள். அதனால் எல்லா இடங்களிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மக்கள் ரசிக்கும் சப்ஜெக்டாக இது இருக்கும். இந்தப் படம் மூலம் ராமராஜனுக்கு நிச்சயம் மறுவாழ்வு கிடைக்கும். அதை நீங்கள் தான் கொடுக்க வேண்டும். தமிழர்கள் நடிக்கும் படங்களுக்கு பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ