ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். பல குறும்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர் ரெஜினா (Regina Cassandra). அழகிய அசுரா படத்தில் நடித்தார். அதன் பிறகு 6 வருடம் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் சிவகார்த்திகேயன் (Sivakarhtikeyan) நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ரீ என்ட்ரி ஆனார். பட வாய்ப்புகள் மெல்ல வந்தது. இதற்கிடையில் அவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். 


ALSO READ | செம மாஸ் மிரட்டலான First லுக் வெளியிட்ட பிரபல நடிகை!!


தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற என 5 படங்களில் நடித்து வருகிறார்.ரெஜினா நடிப்பு தவிர இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். மங்களூர் அருகே உள்ள பண்ணைக்குச் சென்றவர் கெமிக்கல் உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பயிர்களைக் கண்டார். முள்ளங்கி, கோங்குரா போன்ற காய்களை அறுவடை செய்தார். பிறகு தண்ணீர்பவி பீச் பகுதிக்குச் சென்று நீந்தினார், தண்ணீர் சறுக்கு விளையாட்டிலும் பங்கேற்றார். 


இந்நிலையில் ரெஜினாவுக்கு நேற்று பிறந்தநாள் அதனால் அவருக்குப் பலரும் இணைய தளங்களில் வாழ்த்து பகிர்ந்தனர். அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக அவர் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார்.


ஆற்றுப்பகுதியில் இரண்டு கைகளை உயர்த்தியபடி நின்றபடி உள்ள புகைப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியவர்களுக்கு நன்றி சொன்னார். அதே படத்திற்கு கீழே ஒரு வாசகம் குறிப்பிட்டிருந்தார். 


 



 


ALSO READ | எஸ்.ஜே.சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை: விரைவில் ரிலீஸ்!


அதைக்கண்டு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இப்படி எங்களை ஏமாற்றி விட்டீர்களே என்று அவர்கள் செல்லமாக மெசேஜ் பதிவிட்டனர்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR