நடிகர் மாரிமுத்து மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்தை அடுத்து அவர் குறித்த பல செய்திகள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. அப்படி ஒரு செய்தி பற்றி தற்போது காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் (நடிகர் மாரிமுத்து) பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகும். சினிமா படங்களின் வசனங்களைப் போல இந்த சீரியலின் வசனங்களும் ஹிட் ஆகும். பொதுவாக சீரியல் என்றாலே பெண்கள் தான் பார்ப்பார்கள். ஆனால் இந்த சீரியலை பல குடும்பத்தலைவர்களும் விரும்பி பார்த்தது தான் இவரது சக்சஸ். 


மேலும் படிக்க | 'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரனின் புது அவதாரம்..! ரஜினி டைலாக் பேசி மாஸ் காட்டிய மாரிமுத்து..!


இப்படி ஏறுமுகமாக இருந்த இவரது பயணம் மரணத்தால் முடிவுக்கு வந்தது தான் வேதனையின் உச்சம். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திருமணமாகி 27 ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருந்து வந்ததாகவும், பல முறை வீடு மாறியுள்ளதாகவும் கூறினார். அதோடு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது எல்லோருக்கும் ஒரு கனவு என்றும், தானும் ஒரு மிகப்பெரிய வீட்டை வாங்கி இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறி இருந்தார். 


சென்னை மனப்பாக்கம் பகுதியில் வீடு வாங்கியுள்ளதாகவும், வீட்டிற்கு மனைவியின் செல்லப்பெயரான மலர் என்பதை தான் வைக்கப்போவதாகவும் கூறி இருந்தார். அதோடு வீட்டின் வரைபடத்தை தினமும் பார்த்து அதில் சிறு சிறு மாற்றங்களை செய்து பார்த்து பார்த்து வீட்டை கட்டி வருவதாக பேசி இருந்தார் மாரிமுத்து. தொடர்ந்து படங்களிலும் பிஸியாக நடித்து வந்த இவர், இப்போது நம்முடன் இல்லை என்பது தான் வேதனையின் உச்சம்.


மேலும் படிக்க | மாரிமுத்து மறைவு: 'சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணம்...' - வைரமுத்து உருக்கம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ