RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜியால் கடுப்பான ரசிகர்கள்! என்ன செய்தார் தெரியுமா?
RJ Balaji Singapore Saloon Movie: ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து அவர் செய்துள்ள ஒரு விஷயத்தால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர், ஆர்.ஜே.பாலாஜி. ஒரு பிரபல ரேடியோ ஸ்டேஷனில் ஆர்.ஜேவாக வந்து மக்களை ஈர்த்த இவர், தற்போது பிரபல நடிகராக வளர்ந்து திரையில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
ஆர்.ஜே-துணை நடிகர்-ஹீரோ..
ரேடியோவில் ஆர்.ஜேவாக வந்த பாலாஜிக்கு, பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களிலும், துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். வல்லினம், இது என்ன மாயம், வேலைக்காரன், நானும் ரௌடிதான், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்து பலரை சிரிக்க வைத்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு, இவர் படத்தை இயக்கி நடிக்க ஆரம்பித்தார். முதன் முதலில் இவர் எழுதிய எல்.கே.ஜி படத்தை பிரபு இயக்கியிருந்தார். அவரே ஹீராேவாக நடித்திருந்த இந்த படம், அரசியல் த்ரில்லராக உருவாகியிருந்தது. இதையடுத்து, வீட்ல விசேஷம் படத்தையும், மூக்குத்தி அம்மன் படத்தையும் இயக்கி நடித்தார். இப்படி, ஆரம்பத்தில் இருந்து தன் முயற்சியால் வளர்ந்த நடிகர்களுள் இவரும் ஒருவர்.
சிங்கப்பூர் சலூன்:
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம், நாளை (ஜனவரி 25) வெளியாக உள்ளது. இந்த படத்தில் மீனாட்சி செளத்ரி, சத்யராஜ், கிஷன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை கோகுல் இயக்கியிருக்கிறார். சிகை அலங்கார நிபுணர், தனது கனவை நோக்கி ஓடி, அதில் எப்படி சாதிக்கிறார் என்பது போல இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. இவரது பிற படங்கள் பாேல, இந்த படமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் சலூன் படத்தில் நடிகர் ஜீவா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | விஜய் மகனுக்காக அஜித் செய்த உதவி! அடடா..என்னா மனுஷன்யா..
பாலாஜியால் கடுப்பான ரசிகர்கள்..!
நடிகர் ஆர்.ஜே.பாலாஜியிடம் எப்போதும் ஒரு பழக்கம் உள்ளது. இவர், தான் ஹீரோவாக நடிக்கும் படங்களிலும், தான் இயக்கும் படங்கள் ரிலீஸின் போதும் அதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தீயாக வேலை செய்வார். மக்கள் தினம் தினம் உபயோகிக்கும் ஆப்களில் இருந்து, அனைவருக்கும் பிடித்த யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுப்பது வரை, அனைவருக்கும் தன் படம் சென்றடைய வேண்டும் என்று விரும்புபவர் இவர். அப்படி, தனது சிங்கப்பூர் சலூன் படத்தையும் அந்த வகையில் அனைத்து இடங்களிலும் போய் ப்ரமோஷன் செய்து வருகிறார்.
ரசிகர்களுக்கு பிடித்த சித்து வ்லாக்ஸ் நிகழ்ச்சியில் இருந்து, இளம் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூவன்ஸரான தி பொட்டேட் வரை அனைவரது சேனல்களிலும் சென்று ப்ரமோட் செய்துள்ளார். கிரிக்கெட் வீரர் அஷ்வின், சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் என திரும்பும் இடங்களில் எல்லாம் கடந்த 3 நாட்களாக இவரது வீடியோக்களும் போட்டோக்களும் மட்டுமே இருந்து வருகின்றன. இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தார். அதில் அவரிடம் ரசிகர் ஒருவர், “என்ன அண்ணா எங்கு திரும்பினாலும் நீங்கள்தான் இருக்கிறீர்கள்?” என கடுப்பாக கேட்டார். அதற்கு பாலாஜி, “என் படத்திற்கு நான் தானே ப்ரமோட் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
மேலும் படிக்க | Sai Pallavi: களைக்கட்டிய சாய்பல்லவி தங்கையின் நிச்சயதார்த்தம்! வைரல் புகைப்படங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ