க்ராஸ் டாக் ஷோ மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஆர்.ஜே. பாலாஜி. முதலில் நகைச்சுவை நடிகராக கோலிவுட்டில் அறிமுகமான ஆர்.ஜே. பாலாஜி எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்கள் மூலம் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.
இதனையடுத்து ஹிந்தியில் ஹிட்டான பதாய் ஹோ படத்தை தமிழில் ரீமேக் செய்தார். வீட்ல விசேஷம் என்று தயாராகியிருக்கும் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கியிருக்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூக்குத்தி அம்மன் படத்துக்கு பிறகு இந்தப் படமும் வெற்றி பெற்றுள்ளதால் வெற்றி இயக்குநர் என்ற பெயரை எடுத்திருக்கிறார் பாலாஜி.
இந்நிலையில் வீட்ல விசேஷம் படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது. இதில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “ஜனவரி மாதம் விஜய் சாருக்கு கதை சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாழ்க்கையில் இது ஒரு பெரிய வாய்ப்பு. இரண்டு மாதம் கதை ரெடி பண்ணி 40 நிமிங்கள் அவரிடம் ஒன் லைன் சொல்ல முடிந்தது. நான் சொன்ன ஒன் லைன் அவருக்குப் பிடித்திருந்தது.
அதைத் தொடர்ந்து, அவர் என்னிடம் 'நான் உங்க ஸ்டைலில் ஒரு குடும்ப காமெடி படமாக எதிர்பார்த்தேன், இது ரொம்ப பெருசா இருக்கே. எவ்ளோ டைம் ஆகும் கதை எழுத' என கேட்டார். ஒரு வருடம் ஆகும் சார் என சொன்னேன். ஒரு வருஷமா எனக் கேட்டார்.
ஆமா சார், நாங்கள் இப்போது 'வீட்ல விசேஷம்' என்ற ஒரு ரீமேக் படத்தை எடுத்து வருகிறோம். அந்த படத்தின் கதையை எழுத ஐந்து மாதம் ஆனது. உங்களைப் போன்ற பெரிய ஸ்டாரை வைத்து எடுக்கும்போது கண்டிப்பா ஒரு வருடம் தேவைப்படும். அந்தப் படம் நான், நீங்கள் மற்றும் பார்ப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிடிக்கணும்.
மேலும் படிக்க | தாலியோடு போஸ் கொடுக்கும் நயன்... ரசிக்கும் விக்கி! என்னா லவ்வு!
அந்த நோக்கத்தோடு எழுதுவதற்குக் கண்டிப்பா ஒரு வருடம் தேவை படும் எனக் கூறினேன். உடனே விஜய் சார், இது மட்டும் இல்லப்பா எதுவேணாலும், எப்ப வேணாலும் வந்து சொல்லு என கூறினார். எந்த அவசரமும் இல்ல சார், 'தளபதி 67' இல்லனா 'தளபதி 77' அல்லது 'தளபதி 87' பண்றேன் என்று கூறினேன். இந்தக் கதையை பான் இந்தியா அளவுக்கு இருக்கும்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR