திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் தான் சொர்க்கவாசல். அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் கூடுதல் எழுத்தாளர்களாக பணியாற்றி உள்ளனர். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா எடிட்டிங் மற்றும் கிறிஸ்டோ சேவியர் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளனர். சொர்க்கவாசல் படத்தில் RJ பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நாட்டி, சனியா ஐயப்பன், ஷரஃப் உ தீன், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, அந்தோணிதாசன் ஜேசுதாசன், காக்கா கோபால், சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு உண்மை கதையை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காவல் நிலையத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் அனிருத், லோகி?! வைரலாகும் போட்டோ..


கதை 1999 ஆம் காலகட்டத்தில் நடைபெறுகிறது. ஆர்ஜே பாலாஜி பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது அம்மாவுடன் பிளாட்பாரத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். விரைவில் அவருக்கும் அவரது காதலி ரேவதிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. தனது கடையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பேங்க்கில் லோன் வாங்க முயற்சி செய்கிறார் ஆர்ஜே பாலாஜி. இதற்கு அந்த பகுதியில் உள்ள ஒரு முக்கிய அரசு அதிகாரியும் உதவி செய்கிறார். ஆனால் திடீரென்று அந்த அரசு அதிகாரி சில மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார், இந்த கொலைக்கு ஆர்ஜே பாலாஜி தான் காரணம் என்று சந்தேகித்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைகின்றனர். சிறையில் ஆர்ஜே பாலாஜிக்கு என்ன ஆனது? உண்மையில் கொலை செய்தது யார் என்பதே சொர்க்கவாசல் படத்தின் கதை.


ஆர் ஜே பாலாஜிக்கு முற்றிலும் ஒரு வித்தியாசமான கதை இது. அதிகம் பேசாத, காமெடி செய்யாத, மற்றவர்களை கலாய்க்காத ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் பார்த்திபனாகவே வாழ்ந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அடிவாங்கி, ரத்தம் சொட்ட சொட்ட அவர் பேசும் டயலாக் காட்சிகள் நன்றாக இருந்தது. இந்த படம் நிச்சயம் ஒரு நடிகராக அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தரும். சிறை மொத்தத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பிரபல ரவுடியாக செல்வராகவன் சிகாமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு டான் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் எனது வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். சிறை கண்காணிப்பாளராக கருணாஸ், ஓய்வு பெற்ற நீதிபதியாக வரும் நாட்டி, ஆர்ஜே பாலாஜியின் காதலியாக நடித்துள்ள சாணியா ஐயப்பன் ஆகியோர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 


எஸ்பி சுனில் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷரஃப் உ தீன் மற்ற நடிகர்களை தாண்டி தனியாக தெரிகிறார். இவர் நல்லவரா கெட்டவரா? அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதுவே அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு வெற்றியாகவும் உள்ளது. இவர்களை தாண்டி பாலாஜி சக்திவேல், போர் கொடி, சந்தான பாரதி மற்றும் ஹக்கிம் ஷா ஆகியோரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.  படம் முழுக்க ஒரு ஜெயிலில் தான் நடக்கிறது. அது செட் என்று தெரியாத அளவிற்கு ஜெயச்சந்திரன் சிறப்பான வேலை செய்துள்ளார். தினேஷ் சுப்புராயன் ஸ்டன்ட் பல இடங்களில் நன்றாக இருந்தது, இருப்பினும் இன்னும் கொஞ்சம் நம்பும் படி இருந்திருக்கலாம். படம் முழுக்க தேவையில்லாத காட்சிகள் எதுவும் இல்லாமல் கதைக்கு ஏற்றார் போல அடுத்தடுத்து நகர்த்தி செல்கிறார் இயக்குனர் சித்தாத் விஸ்வநாத். 


இருப்பினும் ஒரு சில கதாபாத்திரங்கள் சரியாக சொல்லப்படவில்லை. குறிப்பாக சிகாமணி கதாபாத்திரத்தை முதலில் பெரிய ரவுடி என்று செல்கின்றனர். பிறகு போலீஸ் தரப்பில் நீ நிறைய நல்லது செய்கிறாய் என்றும் சொல்கின்றனர். இதனால் அந்த கதாபாத்திரம் உண்மையில் யார் என்பது சரியாக புரியவில்லை.  படத்தின் நாயகன் பார்த்திபன் கதாபாத்திரம் பல இடங்களில் தனது ஹீரோயிசத்தை காட்ட வழிகள் இருந்த போதிலும் அதை எதுவுமே செய்யாமல் இருந்ததற்கு இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள். கிறிஸ்டோ சேவியர் பின்னணி இசை கூடுதல் சிறப்பு. படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள A சர்டிபிகேட்டை நன்றாக பயன்படுத்தியுள்ளனர். படம் முழுக்கவே சண்டை, ரத்த காட்சிகள் என நிறைந்துள்ளது. தமிழ் ரசிகர்களுக்கு இது போன்ற படங்கள் புதிது என்றாலும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.


மேலும் படிக்க | ரத்தக்கிளறியில் ‘சொர்க்கவாசல்’ டிரைலர்! ரசிகர்கள் வரவேற்பு..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ