ஆர்.கே. சுரேஷின் விசித்திரன் படம் எப்படி உள்ளது? விமர்சனம்!
![ஆர்.கே. சுரேஷின் விசித்திரன் படம் எப்படி உள்ளது? விமர்சனம்! ஆர்.கே. சுரேஷின் விசித்திரன் படம் எப்படி உள்ளது? விமர்சனம்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/05/05/224893-visithiran.jpg?itok=a-0J-rht)
மருத்துவமனையில் கள்ளத்தனமாக நடைப்பெறும் உடலுறுப்பு தானம் மோசடியை வெட்ட வெளிச்சத்திற்க்கு கொண்டுவரும் கதையே விசித்திரன்.
படத்தின் மைய கதை பொள்ளாச்சி மாவட்டம் வால்பாறையில் நடைபெறுமாறு உருவாக்கியுள்ளார் இயக்குனர் பத்மக்குமார். நடிகர் ஆர்.கே. சுரேஷ் படத்தில் போலிஸ் அதிகாரியாக இருந்து பணி ஓய்வுக்கு தாமக முன்வந்து வீட்டில் தனியாக வசித்து வருவார். நடிகர் சுரேஷ் மனைவியாக மலையாள நடிகை ஷாம்னா காசிம் நடித்துள்ளார். சுரேஷின் முன்னாள் காதலி திடீர் மரணம் அடைய அதை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருக்கும் ஹீரோ தனது மணைவியிடம் சற்று விலகி இருக்க நினைக்கிறார். இதனால் அவரது மனைவியோ அவரை விவாகரத்து செய்து விட, சுரேஷ் தனது மகள் உடன் இருப்பார். மகள் விபத்தில் இறந்து விட விரக்கித்தில் இருக்கும் சுரேஷ் திடீரென்று தனது முன்னாள் மனைவிக்கு மூலைச்சாவு ஏற்பட்டாதாக மருத்துவமனை நிர்வாகம் சொல்ல, உடல் உறுப்புகளை தானம் செய்து விடுகின்றனர்.
மேலும் படிக்க | ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன். படம் எப்படி இருக்கு? விமர்சனம்
இதை சுரேஷ் விபத்து அல்ல. நடந்தது திட்டமிட்ட கொலை என்றும் அவர் மகள் இதை போன்று உடலுறுப்பு தேவைக்காக கொலை நடந்து இருப்பதை கண்டறிந்து கொலையாளிக்கு ஆதர பூர்வமாக மருத்துவமனை மற்றும் கொலையாளியை நிருப்பிக்க சுரேஷ் எடுக்கும் முயற்ச்சிகளும், அதில் இருக்கும் சாவல்களும் புலனாய்வுகளும் என்று திரை கதை செல்கிறது. மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் பத்மகுமார் முன்னாதாக இயக்கி மிக பெரிய வெற்றி பெற்ற படம், அதே இயக்குனர் தமிழில் மீண்டும் இயக்கியிருக்கிறார். வெற்றி வேல் மாஹேந்திரன் ஒளிப்பதிவு நன்றாக காட்சி படுத்திருக்கிறார். அதுவும் படத்திற்க்கு கூடுதல் அழகு சேர்த்து உள்ளது.
சதிஷ் சூர்யா படத்தின் எடிட்டிங் மிகவும் சிறப்பாக அமைத்து இருக்கிறார். படத்திற்க்கு கூடுதல் பலமாக பகவதி பெருமாள், இளவரசு, ஜார்ஜ் மர்யான், அனில் முரளி பாண்டி ரவி போன்றோர் மிகவும் அற்புதமாக தங்கள் நடிப்பு திறமை வெளிபடுத்திள்ளனர். படத்தில் காவல்துறை அதிகாரி கொலையாளியை எப்படி புலானாய்வு செய்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதை தத்துருவமாக காட்சிபடுத்தி இருக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிராகஷ் இசைமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சொல்லும் அளவிற்கு இல்லை எனபதே நிதர்சனம். பின்னணி இசையோ படத்திற்குள் நம்மை ஒன்றிணைய வைக்கிறது.
மலையாளத்தில் ஜோசப் படம் போல இந்த படம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லாம். ஏன் என்றால், ஜோசப் படம் விறுவிறுப்பாக செல்லும், ஆனால் தமிழில் அது போன்று இல்லாமல் மிகவும் பொருமையாக நகர்கிறது விசித்திரன். முன்னாதாக மலையாளத்தில் பார்த்தவர்களுக்கு தமிழில் படம் சற்று தொய்வை ஏற்படுத்தும். ஆர்.கே.சுரேஷின் தீவிர நடிப்பு பாராட்டத்தக்கது, மேலும் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு நிறைய கடின உழைப்பை செய்துள்ளார். இன்று மிகப்பெரிய வணிகமாக இருப்பது மருத்துவமும் அதனைச் சுற்றியுள்ள தொழில்களும். ஆனால் மனித உயிர்களைக் காக்க வேண்டிய இந்த மருத்துவத்துறையில் நிகழ்வதாகக் காட்டப்படும் இந்த உடலுறுப்புத் திருட்டு விசயங்கள் நம்மை அதிர்ச்சி படுத்தும். மருத்துவ மாஃபியா கதையை த்ரில்லர் கதையாக மிக நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, விசித்திரன் எமோஷனல் த்ரில்லரைத் தேடும் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR