'எல்லாம் அவன் செயல்', 'அவன் இவன்', 'அழகர் மலை' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாகிருஷ்ணா (எ) ஆர். கே(63). இவர் தனது குடும்பத்துடன் சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி (53) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ராதாகிருஷ்ணா நேற்று (நவ. 10) , வெளியே சென்றுவிட்டதால் வீட்டில் மனைவி ராஜி மட்டும் தனியாக இருந்து வந்தார். அப்போது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல், வீட்டிற்குள் நுழைந்து ராஜியை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி உள்ளனர். இதனையடுத்து அந்த கும்பல் வீட்டின் பீரோவில் இருந்த 250 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். 


மேலும் படிக்க | 'சிம்பு சொன்னதால் இதை செய்தேன்' உதயநிதி ஸ்டாலின் ஓபன்டாக்


இதுதொடர்பாக அருகில் இருந்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். பின்னர், வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நடிகர் ராதாகிருஷ்ணா வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த நேபாள நாட்டை சேர்ந்த வாட்ச்மேன் ரமேஷ் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்வது தெரியவந்தது.


இதையடுத்து, ராதாகிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் வெளிமாநிலத்திற்கு தப்பி செல்லாதவாறு விமான நிலையம், ரயில் நிலையத்திற்கு கொள்ளையர்களின் புகைப்படத்தை அனுப்பி பிடிக்குமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | அப்போ எம்.பி, இப்போ டாக்டர் பட்டம் - இளையராஜாவுக்கு வழங்குகிறார் பிரதமர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ