வெந்து தணிந்தது காடு படத்தின் 50 நாள் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில், சிம்பு, சரத்குமார், ராதிகா சரத்குமார், ஐசரி கணேஷ், கவுதம் வாசுதேவ் மேனன், உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவரும் வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர். அப்போது பேசிய உதயநிதிஸ்டாலின், " வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததற்கு இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள் தான் காரணம், அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் படிக்க | முடிகிறது அவதார் - ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
படத்தை முதலில் நான் தான் பார்த்தேன். படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப்படமாக அமையும் என்று நான் கூறினேன்.சிம்பு இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார். அவர் கேட்டுக்கொண்டதால் நான் இந்த படத்தை வெளியிட்டேன். அவர் கூறிய வார்த்தைகளின் படி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வெந்து தணிந்தது காடு பாகம் இரண்டிற்காக நான் ஆவலாக இருக்கிறேன்" எனக் கூறினார்.
பின்னர் பேசிய சிம்பு, " இந்த படத்திற்கு ஒரு சிறப்பாக வெளியீட்டை கொடுத்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றியது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது. ஏ.ஆர் ரகுமான் சாருடைய இசைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் பணியாற்றுவது எனது சொந்த நிறுவனத்தில் பணியாற்றுவது போல் இருக்கிறது. இந்த படம் ரத்தமும் சதையும் கலந்த ராவான படமாக அமைந்தது. அதை வரவேற்ற மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்" என கூறினார்.
மேலும் படிக்க | ‘ரசிகர்களே தொந்தரவு செய்யாதீங்க’ - சிம்புவின் வேண்டுகோள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ