Indraja Shankar:ரோபோ சங்கர் மகளுக்கு நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
Indraja Shankar Engagement: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு நிச்சயதார்த்த விழா நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், அவ்விழாவில் எடுக்கபட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Robo Shankar Daughter Indraja Shankar Engagement: தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக உலா வருபவர், ரோபோ சங்கர். இவருக்கு இந்திரஜா என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கும், இவரது மாமாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இந்திரஜாவிற்கு நிச்சயதார்த்தம்:
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த இவரது பாண்டியம்மா என்ற கதாப்பாத்திரம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது. இந்த நிலையில், இவர் இன்னும் சில படங்களிலும் துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இன்ஸ்டாகிராமிலும் பிரபலமானவராக உள்ளார். இவர், தனது தாய் மாமாவையே காதலிப்பதாக கூறப்பட்டது. இவரைத்தான் சில நாட்களில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேச்சு அடிப்பட்டது. அதன்படி, இவர் தனது மாமாவையே விரைவில் கரம்பிடிக்க உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்த விழா நடந்து முடிந்துள்ளது.
மேலும் படிக்க | Vijay Political Entry: கேலிக்குள்ளான விஜய்யின் அரசியல் எண்ட்ரி! வைரலாகும் மீம்ஸ்..
வைரலாகும் புகைப்படம்:
இந்திரஜா தனது வருங்கால கணவர் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் இந்திரஜாவும் அவரது வருங்கால கணவர் மற்றும் குடும்பத்தினரும் முகத்தில் மஞ்சள் பூசியவாறு போஸ் கொடுக்கின்றனர். இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாப்பிள்ளை யார்?
இந்திரஜா சங்கர், ‘மாமா’ என்று ஒரு நபரை குறிப்பிட்டு அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வந்தார். அவர் யாரென்று ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில், இதற்கு ரோபோ சங்கரும் அவரது மனைவி பிரியங்காவும் ஒரு நேர்காணலில் விளக்கம் கொடுத்திருந்தனர். அது தங்களின் உறவினர்தான் என்றும் அவரைத்தான் இந்திரஜாவிற்கு திருமணம் செய்து கொள்ள வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்திரஜாவின் காதல், குடும்பத்தினரின் கண்காணிபிற்கு கீழ்தான் வளர்ந்துள்ளது என்பதை அனைவருமே அறிவர். இந்திரஜா மாமா என்று குறிப்பிட்டு வந்தவரின் பெயர், கார்த்திக். அவர், மருத்துவராக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திரஜா, 2003ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவருக்கு, தற்போது 20 வயதாகிறது. முன்னர் நடைப்பெற்ற நேர்காணலில் ரோபோ சங்கரையும் பிரியங்காவையும் வனிதா பேட்டியெடுத்தார். அப்போது,’20 வயதுதான் ஆகிறது அவளுக்கு, அதற்குள் ஏன் திருமணம் செய்து வைக்கிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு இந்திரஜாவின் பெற்றோர் அவளது சம்மதத்தின்படிதான் அனைத்தும் நடப்பதாக தெரிவித்தனர். இந்திரஜாவின் திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Vijay: அண்ணாமலை to அனிருத்: விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு வரவேற்பளித்த பிரபலங்கள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ