Vijay Political Entry: கேலிக்குள்ளான விஜய்யின் அரசியல் எண்ட்ரி! வைரலாகும் மீம்ஸ்..

Vijay Political Entry: நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து இதையே கண்டண்ட் ஆக்கி, ரசிகர்கள் அனைவரும் இவரை மீம்ஸ்களுக்கு கண்டண்டாக மாற்றி வருகின்றனர். 

Vijay Political Party Thamizhaga Vetri Kazhagam Viral Memes On Social Media: பல கோடி தமிழ் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ள நடிகர் விஜய், இன்று தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார். அவரது கட்சிக்கு, ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் விஜய் தான் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலர் அப்செட் ஆகியுள்ளனர். அது மட்டுமன்றி, இவர்களில் பலர் இது குறித்த மீம்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த மீம்ஸ்களை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க வைக்க தயாராயிருங்கள்!

1 /9

நடிகர் விஜய் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அல்லாமல், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ள அவர், தான் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து, சில நெட்டிசன்கள் விஜய்யின் அரசியல் எண்ட்ரியை நகைச்சுவைக்குள்ளாக்கும் வகையில் சில மீம்ஸ்களை பதிவேற்றி வருகின்றனர். 

2 /9

பல விஜய் ரசிகர்கள், தங்களின் மனைவி, குழந்தைகளுடன் எதிர்காலத்தில் விஜய்யின் படங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தனர். தற்போது விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால் அவர்களின் கனவெல்லாம் தவிடுபொடியாகியுள்ளது.

3 /9

விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் அவர் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என ரசிகர்கள் கருதுகின்றனர். அதன் வெளிபாடே, இந்த மீம். 

4 /9

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமலை ரசிகர்களை அடுத்து விஜய்-அஜித்திற்குதான் ரசிகர்கள் அதிகளவில் இருந்தனர். இவர்களே போட்டி நடிகர்களாகவும் பார்க்கப்பட்டனர். விஜய் சினிமாவில் இருந்து விலகுவதை அடுத்து, இனி அஜித் ராஜ்ஜியம்தான் என ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். 

5 /9

விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் கருதுகின்றனர். அந்த நம்பிக்கையோடு அவர்கள் பதிவிட்ட ஒரு மீம் இது. 

6 /9

லியோ படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸில் உள்ளதால் அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது விஜய் நடிப்பில் இருந்து விலகுவதால் அப்படி ஒரு படம் இனி வெளியாகும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் இழந்து விட்டனர். 

7 /9

முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆரையும், விஜய்யையும் ஒப்பிட்டு சிலர் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்களின் கைவண்ணம்தான் இது. 

8 /9

தமிழ் சினிமாவின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட விஜய், தற்போது சினிமாவை விட்டு விலகுவதை ஒட்டி, பிற நடிகர்கள் அவருக்கு Tata கூறுவது போல இருக்கும் இந்த மீம் வைரலாகி வருகிறது. 

9 /9

விஜய்யின் நடிப்பை விமர்சனம் செய்யும் சில ரசிகர்கள் பதிவிட்டுள்ள மீம் இது.