Vijay Political Entry As Thamizhaga Vetri Kazhagam Leader Celebrities Welcomes Thalapathy: ரசிகர்களால் அன்புடன் ‘தளபதி’ என்று அழைக்கப்பட்டு வந்த நடிகர் விஜய், தற்போது ‘தலைவர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தனை நாட்களாக படங்களிலும், பட விழாக்களிலும் அரசியல் பேசி வந்த விஜய், தற்போது அதிகாரப்பூர்வமாகவே தனது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மட்டுமன்றி, பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை வாழ்த்து..
பாஜக மாநில கட்சியின் தலைவர் அண்ணாமலை விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய்யை வாழ்த்தி அவரை வர்வேற்பதில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு @actorvijay அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி… https://t.co/oYP8IfDyxn
— K.Annamalai (@annamalai_k) February 2, 2024
மேலும், தமிழக மக்களை சுரண்டிக்கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராக, பாகுபாடற்ற, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக்க வந்திருக்கும் கட்சி என்றும் விஜய்யின் கட்சியை புகழ்ந்திருக்கிறார்.
அர்ச்சனா கல்பாத்தி:
விஜய் நடித்து வரும் GOAT படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
You have always inspired us to climb higher and keep raising the bar. A warm welcome and best wishes for this new journey Sir https://t.co/A8uAQljS1a
— Archana Kalpathi (@archanakalpathi) February 2, 2024
அதில், “பல்வேறு படிகளை ஏற எங்களை ஈர்த்திருக்கிறிர்கள். உங்களது வருங்கால அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ்:
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விஜய்யின் 70வது படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், விஜய் தனது 69 படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார். இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
Warm Welcome & All the very best @actorvijay sir #தமிழகவெற்றிகழகம் https://t.co/tEGBswRhNL
— karthik subbaraj (@karthiksubbaraj) February 2, 2024
ராகவா லாரன்ஸ்:
மக்களுக்கு தொண்டு செய்வதில் ஆர்வமுடையவர் ராகவா லாரன்ஸ். இவர் விஜய்யின் பல படங்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். இவரும் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதை வரவேற்றுள்ளார்.
Congratulations Nanba on your political entry. I pray god for your success in this new journey @actorvijay https://t.co/E8HRTU20jp
— Raghava Lawrence (@offl_Lawrence) February 2, 2024
மேலும் படிக்க | Vijay Political Party: ‘2026-ன் முதல்வர் விஜய்’ வைரலாகும் ரசிகர்களின் போஸ்டர்!
நெல்சன் திலீப்குமார்:
விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன், அவருக்கு வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
Congratulations and all the very best @actorvijay sir #TVKVijay https://t.co/vsOIKFNQ1P
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) February 2, 2024
சிபி சத்யராஜ்:
நடிகரும் சத்யராஜின் மகனுமான சிபி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டர் பதிவினை வெளியிட்டிருக்குறார்.
I wholeheartedly salute to Thalapathy @actorvijay anna for keeping his word and taking the plunge to enter politics.Even though as a fan I will miss watching his films on the big screen,I support his decision as the world needs leaders like him. #தமிழகவெற்றிகழகம்
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) February 2, 2024
அதில், “தன் வார்த்தையை காப்பாற்றும் வகையில் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்ததற்கு நன்றி விஜய் அண்ணா” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தான் இவரை வரவேற்பதாகவும், இந்த உலகிற்கு இவரைப்போன்ற தலைவர்கள் தேவை என்றும் தெரிவித்திருக்கிறார்.
சாந்தனு:
விஜய்யுடன், மாஸ்டர் படத்தில் சேர்ந்து நடித்தவர் சாந்தனு. பாக்கியராஜ்ஜின் மகனான இவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டர் பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
Wishing you only the best anna
I wish you achieve great heights and do ur best of what you intend to do for TN as a leader
A warm welcome #தமிழகவெற்றிகழகம் https://t.co/VBhNcbM6cu— Shanthnu (@imKBRshanthnu) February 2, 2024
இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகள் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அனிருத்:
விஜய்யுடன் பல படங்களில் நெருங்கி பணியாற்றிய முன்னணி இசையமைப்பாளர் அனிருத்.
Congratsss and all the best dearest @actorvijay sir https://t.co/3MRWZ0wYeK
— Anirudh Ravichander (@anirudhofficial) February 2, 2024
இவரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அட்லீ:
விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கியவர், அட்லீ. இவரும் விஜய்யும் நெருங்கிய நண்பர்களாகவும் உள்ளனர்.
Congratulations Anna
https://t.co/ncbQ4DunO6— atlee (@Atlee_dir) February 2, 2024
அட்லீயும் தனக்கு பிடித்த தளபதிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | Vijay Political Entry: கேலிக்குள்ளான விஜய்யின் அரசியல் எண்ட்ரி! வைரலாகும் மீம்ஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ