Indraja Shankar Wedding :  நடிகர் ரோபோ சங்கரின் மகள் திருமணத்தில், மாப்பிள்ளைக்கு ரோபோ சங்கரின் மனைவி முத்தமிடும் போட்டோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது என்ன தான் விவகாரம்? இந்த போட்டோவின் பின்னணி என்ன? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோபோ சங்கரின் மகளுக்கு திருமணம்..


தமிழில் சின்னத்திரையில் அறிமுகமாகி சினிமாவில் அசத்தி வருகிறார் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜாவும் பிகில், விருமன் என சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்குக்கும், இந்திரஜாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் வியக்க வைத்துவிட்டார் ரோபோ சங்கர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இந்த கல்யாணம் ஒருசில நாட்களுக்கு நடந்தது. இந்த சூழலில் இவர்கள் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்ற யூடியூப் தளத்தில், பிரியங்கா சங்கரும், கார்த்திக்கும் நடனமாடும் வீடியோ வெளியானது.


மேலும் படிக்க | Ajith Kumar Accident: “லைசன்ஸ் இருக்கா உங்க கிட்ட?” விபத்து ஏற்படுத்திய அஜித்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!


மாமியாருக்கு முத்தம்..


தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில்தான் தான் அந்த சர்ச்சையே தொடங்கியது. இதில் என்ன சர்ச்சை என்றால், தனது அக்காவுடன் நடனமாடும் கார்த்திக், பிரியங்காவுக்கு ஒரு மகிழ்ச்சியில் முத்தமிட்டுவிட்டார். அதுவும் உதட்டில் கொடுத்ததால் அது இப்போது பேசுபொருளாகியுள்ளது. 



நெட்டிசன்கள் விமர்சனம்:


நெட்டிசன்கள் பலரும், அக்காவுக்கு இப்படி முத்தம் கொடுக்கலாமா என்றும் இது அநாகரீகமான செயல் என்றும் விமர்சிக்கத்தொடங்கினர். இதில் சிலர் முத்தமிடும் போட்டோவை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர். அதே நேரம் மற்றொரு தரப்பினர், அன்பின் அடையாளம் தான் முத்தம் என்றும், அக்காவுக்கு தம்பி முத்தமிட்டால் அதில் என்ன தவறு என்றும் தங்கள் ஆதரவை பிரியங்கா சங்கருக்கு தெரிவித்து வருகின்றனர். படுமோசமாக இந்த புகைப்படங்களின் கீழ் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுபோன்ற விமர்சனங்கள் நிச்சயம் சம்மந்தப்பட்டவர்களை பாதிக்கும் என்பது தெரியாமல் இப்படி செய்வது தவறு என்ற குரலும் எழுந்து வருகிறது.


மேலும் படிக்க | “ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல” போனி கபூர் கூறிய அதிர்ச்சி தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ