பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளின் முகமாக இருந்தவர், ரோபா சங்கர். சின்னத்திரையில் இருந்து மெல்ல மெல்ல வெள்ளித்திரைக்கு சென்றார். ஜைஜான்டிக் உடலுடன் பலரை சிரிக்க வைத்தபடி வலம் வந்த ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் மெல்லிய உடலுடன் காணப்பட்டார். இதற்கான காரணத்தை அவரே தெரிவித்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் மெலிந்த ரோபோ சங்கர்..


மிமிக்கிரி திறமை மற்றும் காமெடி டைலாக்குகள் மூலம் பல கோடி மக்களை சிரிக்க வைத்தவர், ரோபோ சங்கர். இவரது தனித்திறமைகள் மூலம் அடையாளம் காணப்பட்டாலும், மக்கள் கட்டுமஸ்தான உடலமைப்பை வைத்துதான் இவரை அடையாளம் கண்டுகொண்டனர். சுமார் 15 ஆண்டுகளாக ரேபாே சங்கரை, இப்படியே பார்த்து மகிழ்ந்த மக்களுக்கு திடீரென இவரை ஒல்லியாக பார்த்ததும் தூக்கி வாரி போட்டுவிட்டது. இவர் ஒல்லியாக உள்ள போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் சுழல, “ரோபாே சங்கருக்கு வியாதி, ஏதோ நோய்..” போன்ற தகவல்களும் பகிரப்பட்டன. இந்த நிலையில்தான் ரோபாே சங்கர் உடல் மெலிந்த காரணத்தை அவரே கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க | உயிருடன் வந்த மீனாட்சி..வெற்றியை ‘சப்’என அறைந்த சக்தி..மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்..!


எடை குறைந்ததற்கான காணரம்..


ரோபாே சங்கர், சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அதில், அவர் உடல் மெலிந்ததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், தன் உடல் எடையை குறைப்பதற்காக பல நாட்களாக டயட் இருக்க முயற்சி மேற்கொண்டதாக கூறினார். இதையடுத்து, டயட் இருக்கு சமயத்தில் தனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கயிதால் உடல் எடை மளமளவென குறைந்து விட்டதாக அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் சென்றதாலேயே, தன்னால் அந்நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வர முடிந்ததாக தெரிவித்திருந்தார். 


“அவர்கள்தான் உறுதுணையாக இருந்தனர்..”


ரோபோ சங்கர், தான் மிகவும் முடியாமல் இருந்த காலத்தில் தனது மனைவியும் மகளும்தான் தனக்கு உறுதுனையாக இருந்ததாக தெரிவித்திருந்தார். மேலும், தான் எத்தனையோ காமெடி நிகழ்ச்சிகள் மூலம் மக்களை சிரிக்க வைத்திருப்பதாகவும் கடந்த நான்கு மாதங்களில் வீட்டில் ரெஸ்ட் எடுத்த போது நிறைய காமெடி நிகழ்சிகளை பார்த்து சிரித்ததாகவும் பேசினார். 


மனைவியும் டயட்டா? 


ரோபோ சங்கரின் மனைவி, பிரியங்க சங்கரும் உடல் எடை மெலிந்தது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகி வந்தன. கணவரை போல, இவரும் இயற்கையாகவே நகைச்சுவை திறன் படைத்தவர். இவரும் உடல் எடை இளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மகளுக்கு திருமணம்? 


ரோபாே சங்கரின் மகள், இந்திரஜா சங்கர் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார். அடுத்து இயக்குநர் சங்கரின் மகள் அதிதியுடன் விருமன் படத்தில் நடித்தார். அவர், “மாமா..மாமா..” என ஒருவருடன் எடுத்த போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் இதுபோன்ற சில போட்டோக்களை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு திருமணம் ஆக உள்ளது என தகவல்கள் வெளியானது. இந்திரஜா, புகைப்படங்கள் எடுத்து வெளியிடும் நபர் ரோபா சங்கரின் குடும்பத்தாருக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Mangal Dhillon: கொடிய நோயால் பிரபல பாலிவுட் நடிகர் மரணம்..ரசிகர்கள்-திரை பிரபலங்கள் இரங்கல்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ