அண்மையில் புஷ்பா படத்திற்கு இசையமைத்து ஹிட் கொடுத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத் அடுத்தடுத்து பல படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ஆல்டைம் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. உலகளவிலும் அந்தப் பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் தேவிஸ்ரீ பிரசாத்தின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ஹிட், இந்தப் பாடலுக்கு இசையைப் போலவே சமந்தாவின் நடனமும் பொறி பறக்க வைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்யும் ரஜினி?!


இதனால் மகிச்சியில் இருக்கும் தேவிஸ்ரீ பிரசாத், இன்னொரு ஹேப்பியான செய்தியை வெளியிட்டுள்ளார். மார்ச் 18 ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் சென்னை தீவுத் திடலில் இசைஞானி இளையராஜாவின் ‘ராக் வித் ராஜா’ என்ற இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தீவுத்திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்து விளங்கும் பின்னணி பாடகர்கள் பலர் கலந்து கொண்டு இசை இருந்து படைக்க உள்ளனர். ஹிந்தியில் உள்ள பிரபல பின்னணி பாடகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.



அவர்களுடன் தேவி ஸ்ரீபிரசாத்தும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இசை உலகின் கடவுளான இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து மார்ச் 18 ஆம் தேதி ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், முதன்முறையாக அவருடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கங்கை அமரன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மனோ, எஸ்.பி.சரண், உஷா உதுப், ஸ்வேதா மோகன், கார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா, வெங்கட் பிரபு, பிரேம்கி அமரன், சைலஜா, பவதாரிணி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். 


மேலும் படிக்க | விஜய் 66 படத்தில் ‘விஜய்’ பட ஹீரோயின்?!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR