விஜய் 66 படத்தில் ‘விஜய்’ பட ஹீரோயின்?!

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ‘அரபிக் குத்து’ , சோசியல் மீடியாவில் தொடர் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் இணைகிறார்.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Mar 14, 2022, 05:15 PM IST
  • விஜய் 66 படத்தின் கதாநாயகி யார்?
  • விஜய் 66 படத்தை வம்சி இயக்குகிறார்
  • பீஸ்ட்டைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படம்
விஜய் 66 படத்தில் ‘விஜய்’ பட ஹீரோயின்?! title=

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ‘அரபிக் குத்து’ , சோசியல் மீடியாவில் தொடர் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் இணைகிறார்.

அவர் இயக்கிய ‘தோழா’ உள்ளிட்ட படங்களைப்போல குடும்ப சென்டிமென்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து  இப்படம் எடுக்கப்படவுள்ளது. தமன் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மெஹ்ரீன் பிர்ஸாதா நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப்பைச் சேர்ந்த நடிகை மெஹ்ரீன் பிர்ஸாதா தமிழில் சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வாயிலாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படத்தில் நடித்த அவர் கடைசியாக நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில்தான் விஜய்யின் 66ஆவது படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

                                                                         Mehreen Twitter

மேலும் படிக்க | பற்றி எரியும் சர்ச்சைப் பதிவு: ஷாருக்கானை சீண்டுகிறாரா அட்லி?!

முன்னதாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளதால் இரு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பழக்கப்பட்ட ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் மெஹ்ரீன் பிர்ஸாதா தற்போது இதில் இணைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்மிகாவுக்குப் பதிலாக இவர் நடிக்கிறாரா அல்லது இரு நாயகிகளும் இணைந்து இதில் நடிக்கவுள்ளார்களா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.

தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் பிசியாக நடித்துவரும் மெஹ்ரீனுக்கும் ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் பஜன் லாலின் பேரன் பவ்ய பிஷ்னாய்க்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 2021 இறுதியில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘விஜய்-66’ வில்லன் இவரா!? இவரு லிஸ்ட்லயே இல்லையே!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News