இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம், உலகளவில் மெகாஹிட் அடித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்ட படத்தின் ரிலீஸ், ஒருவழியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் படம், எதிர்பார்க்காத வெற்றியை பெற்றதுடன், பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் கொடி கட்டி பறந்தது. இந்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூலை வாரிக் குவித்த தென்னிந்திய படமாகவும் மாறியது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் வசூல் சாதனைகளைப் படைத்த இந்தப் படம், ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸில் இடம்பிடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IMDB தரவரிசையில் முதல் 10 இடம் பிடித்த திரைப்படங்கள்!


ஏற்கனவே பாகுபலி படம் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸில் இணைந்திருந்த நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படமும் இணைந்து கொண்டது. இப்போதைக்கு இந்தியாவில் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் மட்டும் ராஜமௌலியின் 2 படங்கள் இருக்கின்றன. ஒடிடியில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆர்ஆர்ஆர் படத்தின் இந்தி உரிமையைக் கைப்பற்றியது. இது குறித்து ஹாலிவுட் பிரபல இயக்குநர்களான ரூசோ பிரதர்ஸூடன் நடைபெற்ற உரையாடலில் பேசும்போது, நெட்பிளிக்ஸ் மீது தனக்கு கோபம் இருப்பதாக ராஜமௌலி தெரிவித்தார்.


மேலும் படிக்க | பாலிவுட் படங்களை காலி செய்த தென்னிந்திய படங்கள்


அவர்கள் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இந்தி பதிப்பை மட்டுமே வாங்க முன்வந்ததாகவும், மற்ற 4 மொழிகளில் ரிலீஸான படத்தை அவர்கள் வாங்கவில்லை எனத் தெரிவித்தார். இதனால் நெட்பிளிக்ஸ் மீது கோபம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். "ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் கிடைத்திருக்கும் ஆதரவு வியக்க வைக்கிறது. மேற்கத்திய நாட்டு ரசிகர்களுக்கு என்னுடைய படம் பிடிக்கும் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால், ஆர்ஆர்ஆர் படத்தை ஐரோப்பிய ரசிகர்களும் வெகுவாக ரசித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு ஒரே ஒரு காரணம் நெட்பிளிக்ஸ் மட்டுமே. அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ