IMDB தரவரிசையில் முதல் 10 இடம் பிடித்த திரைப்படங்கள்!

2022ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு IMDB ரேட்டிங் கொடுத்ததில் முதல் 10 இடத்தை பிடித்த சிறந்த படங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 15, 2022, 07:42 AM IST
  • விக்ரம் படம் IMDB தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.
  • கமல்ஹாசன் சினிமா கரியரில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
  • அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக அமைந்தது.
IMDB தரவரிசையில் முதல் 10 இடம் பிடித்த திரைப்படங்கள்! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரது மிரட்டலான நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்திற்கு IMDB 8.6 ரேட்டிங் கொடுத்துள்ளது.  கமல்ஹாசன் நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியான விக்ரம் பட  கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் ஆகும்.  ஓய்வு பெற்ற ரா ஏஜென்ட் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போராடும் கதை தான் இப்படம்.  இந்த படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.  

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ராக்கி பாயாக நடித்து மெகா ஹிட் ஆன 'கேஜிஎப்-2' படத்திற்கு IMDB 8.5 ரேட்டிங் கொடுத்துள்ளது.  இந்த கேங்ஸ்டர் அதிரடி திரைப்படத்தில் ஆதிரா, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது.  இந்த படம் தற்போது அமேசான் பிரைமில் கிடைக்கிறது.  

மேலும் படிக்க | குழந்தைகளை குஷிப்படுத்திய மை டியர் பூதம்! திரைவிமர்சனம்!

விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு IMDB 8.3 ரேட்டிங் கொடுத்துள்ளது.  இந்த படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரபர்தி, தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர் போன்ற பலர் நடித்துள்ளனர்.  80 மற்றும் 90களில் காஷ்மீர் பண்டிட்களின் வாழ்க்கையை குறித்து இப்படம் கூறுகிறது.  கடந்த மார்ச் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம், தற்போது ஜீ5 தளத்தில் கிடைக்கிறது.

வினீத் ஸ்ரீனிவாசனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான ரொமான்டிக் திரைப்படமான 'ஹிரிதயம்' படத்திற்கு IMDB 8.1 ரேட்டிங் கொடுத்துள்ளது.  பிரணவ் மோகன்லால், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் ரசிகர்களை உணர்வுபூர்வமாக ரசிக்க வைத்த இந்த படத்திற்கு அதிகளவில் நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்தது.  கதாநாயகனின் கல்லூரி வாழ்க்கை தொடங்கி திருமண வாழ்க்கை வரை நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை இப்படம் விவரிக்கிறது, இந்த படம் பலரின் வாழ்க்கையோடு ஒத்துப்போவது போல் இருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.  தற்போது இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட வரலாற்று திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு IMDB 8.0 ரேட்டிங் கொடுத்துள்ளது.  இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் , ஒலிவியா மோரிஸ், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, ராய் ஸ்டீவன்சன், சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்துள்ளனர்.  1920களில் இருந்த சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமாராம் பீம் ஆகியோரின் கதையை இப்படம் கூறுகிறது.  தற்போது இப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது.

பெஹ்ஸாத் கம்பாடா இயக்கத்தில் மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் வெளியான 'எ தர்ஸ்டே' திரைப்படத்திற்கு IMDB 7.8 ரேட்டிங் கொடுத்துள்ளது.  ஒரு ஆசிரியர் அப்பாவியான மழலை பள்ளி குழந்தைகளை வைத்து தனது கோரிக்கைகளை நிறைவேற்ற செய்யும் செயல்கள் தான் இப்படத்தின் கதை.  யாமி கவுதம் நடித்துள்ள இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'ஜண்ட்' திரைப்படத்திற்கு IMDB 7.4 ரேட்டிங் கொடுத்துள்ளது.  இப்படத்தில் அமீதாப் பச்சன் நாக்பூர் உடற்கல்வி ஆசிரியர் விஜய் பர்ஸீ என்கிற பெயரில் நடித்துள்ளார், மேலும் இதில் ஆகாஷ் தோஸர் மற்றும் ரிங்கு ராஜகுரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தற்போது இப்படம் ஜீ5 தளத்தில் கிடைக்கிறது.

அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சன் தலைமையிலான 'ரன்வே 34' திரைப்படத்திற்கு IMDB 7.2 ரேட்டிங் கொடுத்துள்ளது.  இப்படத்தில் அமிதாப் பச்சன் வழக்கறிஞர் நாராயண் வேதாந்த் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் கிடைக்கிறது.

ஹுசைன் ஜைதியின் தி மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்ட 'கங்குபாய் காத்தியாவாடி' படத்திற்கு  IMDB 7.0 ரேட்டிங் கொடுத்துள்ளது.  சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சிறுவயதிலேயே விபச்சாரத்தில் தள்ளப்பட்ட ஆலியா பட் நடித்த கங்குபாயின் வாழ்க்கை பயணத்தை இது காட்டுகிறது.  இப்படத்தில் அஜய் தேவ்கன், விஜய் ராஸ், சீமா பஹ்வா மற்றும் இந்திரா திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  தற்போது இந்த படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது. 

இந்திய வரலாற்றின் மிகவும் தைரியமான போர்வீரர்களில் ஒருவரான பிருத்விராஜ் சவுகானின் கதையை  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட 'சாம்ராத் பிரித்விராஜ்' படத்திற்கு  IMDB 7.0 ரேட்டிங் கொடுத்துள்ளது. இந்த படத்தில் அக்ஷய் குமார், மனுஷி சில்லர், சஞ்சய் தத், மற்றும் சோனு சூட் ஆகியோரும் நடித்துள்ளனர்,  தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் கிடைக்கிறது.

மேலும் படிக்க | அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி - கார்கி திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News