Movie Trailer: வெளியானது ருத்ர தாண்டவம் டிரெய்லர், வசனங்கள் அதிரடி
ருத்ரதாண்டவம் படத்தின் ட்ரைலர் இன்று (2021, ஆகஸ்ட் 24) வெளியானது. ட்ரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகின்றன...
சென்னை: சமூக பிரச்சனையை பேசும் திரைப்படங்களை இயக்குவதில் பிரபலமானவர் மோகன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான 'திரௌபதி' திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவிய போதிலும், வணிகரீதியாக இப்படம் வெற்றியைப் பெற்றது.
திரெளபதி திரைபடத்தில் காதல், திருமணம் என சில பிரச்சனைகளைப் பற்றி பேசியது. தற்போது ருத்ரதாண்டவத்தில், மற்றுமொரு முக்கிய பிரச்சனை குறித்து பேசப்படும்.
ருத்ர தாண்டாம் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
ருத்ரதாண்டவம் படத்தின் ட்ரைலர் இன்று (2021, ஆகஸ்ட் 24) வெளியாகியுள்ளது.
U / A சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா பெற்றுள்ளார். வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வாங்கியுள்ளது.
ட்ரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.
சாதி அரசியல், சட்டங்கள், மதமாற்றம் என தீவிரமான பிரச்சனைகளை ருத்ர தாண்டவம் பேசுகிறது என்பது டிரெயிலரில் தெரிகிறது.
இந்த திரைப்படமும், உண்மை சம்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 'திரௌபதி' திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் ருத்ரதாண்டவம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சின்னத்திரை புகழ் தர்ஷா குப்தா நடிக்கிறார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ருத்ர தாண்டவம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது.
Also Read | கவுண்டமணியை சந்தித்த சிவகார்த்திகேயன்; இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR