சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் கிராண்ட் பைனல் நிகழ்ச்சியை நேரில் பார்க்க டிக்கெட் இலவசம்!
SaReGaMaPa Seniors Season 3: 6 பைனலிஸ்டுடன் அனல் பறக்க போகும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் கிராண்ட்பைனல் - டைட்டிலை வெல்ல போவது யார்?
தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிங்கிங்ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி. குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது. சரிகமப சீசன் 3 (சீனியர்ஸ் ) நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, லிட்டில் சேம்ப்ஸ், சீசன் 3 மொத்தம் 28,போட்டியாளர்களுடன்,தொடங்கப்பட்டது. ஸ்ரீனிவாஸ், விஜய்பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் நிகழ்ச்சி இது.
சரிகமப மெகா ஆடிஷன்களில் மூன்று நடுவர்களும் சிறப்பு நடுவர்களும் மனோ மற்றும் வைக்கம் விஜயலட்சுமி போன்ற நன்கு பிரபலமான பின்னணிப் பாடகர்களும் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் தொகுப்பாளராக ஆறாவது முறையாக அர்ச்சனா சந்தோக் கலக்கி வருகிறார். சிறப்புத் தேவைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட குழந்தைகள் உட்பட, பல்வேறு பின்னணியை சேர்ந்த சிறுவர்களின் திறமையை வெளில்க் கொண்டு வருகிறது.
மேலும் படிக்க | 2023-ல் மண்ணுலகை விட்டு மறைந்த 10 கலைஞர்கள்! கண்கலங்க வைத்த நடிகர்களின் இறப்பு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வந்த நிலையில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட்டை நடத்தி குழந்தைகளின் திறமையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் என நான்கு பேர் இதுவரை பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீஸ்டைல் ரவுண்டு மூலமாக நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்வாறாக மொத்தம் 6 போட்டியாளர்களுடன் அனல் பறக்கும் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி நேரடி ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண ஆசைப்படுபவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரஜினியை மிஞ்சிய கமல் படம்! ரீ-ரிலீஸில் அதிக வசூல் குவித்த ஆளவந்தான்!
இலவச டிக்கெட்டுகளை பெற சென்னை கிண்டியில் உள்ள ஜீ தமிழ் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நடுவர்களின் மதிப்பெண்கள் மட்டுமின்றி மிஸ்டு கால் மூலமாக மக்களின் ஓட்டுகளை வைத்து வெற்றியாளரை தேர்வு செய்யும் வகையில் இந்த கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 6 போட்டியாளர்களில் டைட்டிலுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டி செல்ல போகும் போட்டியாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன்3 நிகழ்ச்சியினை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | Best Actress 2023: த்ரிஷா to சமந்தா-2023ஆம் ஆண்டின் சிறந்த நடிகை யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ