தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது வசூல் மன்னனாக வலம் வந்தாலும் இவரது ஆரம்ப காலத்தில் இவருக்கு மிகப்பெரும் துணையாக இருந்தவர் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, விஜயகாந்த்திடம் சொல்லி அவருடன் விஜய்யை நடிக்க வைத்து பிரபலமாக்குவது என பல காரியங்களை செய்தார். ஒருகட்டத்தில் மகனுக்கும், தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது அனைவரது வீட்டுக்குள்ளும் நடப்பது போல் வழக்கமான ஒன்றுதான் என நினைத்திருக்க இந்த கருத்து வேறுபாடு விரிசலாக மாறி நீதிமன்றம்வரைக்கும் விஜய் சென்றார். இதனால் இந்த விவகாரம் மேலும் முற்றியது. இப்படிப்பட்ட சூழலில் சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகரின் பிறந்தநாள் வந்தபோதுகூட விஜய் தன் தந்தையை நேரில் சந்திக்கவில்லை. இது பலரை வருத்தத்திற்கு ஆளாக்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அதேசமயம், இது அவர்கள் பிரச்னை இதில் மற்றவர்கள் ஏன் தலையிட வேண்டுமென்று விஜய் ரசிகர்கள் வாதிட்டனர்.நிலைமை இப்படி இருக்க தனக்கும் விஜய்க்கும் வருத்தம் இருப்பது உண்மைதான் என சில பேட்டிகளிலும் சந்திரசேகர் கூறினார். 


இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் விஜய் குறித்து எஸ்.ஏ.சி பேசியிருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. நேற்று வாணி மஹாலில் எம்ஜிஆர் க்ரியேஷன்ஸ் எனும் பெயரில் தொண்டு நிறுவன தொடக்க விழா நடந்தது. இதில் எஸ்.ஏ.சி, ஆர்.கே.செல்வமணி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சி எடப்பாடி பழனிசாமியை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார். அதை பழனிசாமி தனது அக்மார்க் சிரிப்புடன் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது சந்திரசேகர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென,  ‘ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை மனைவி என்று இருக்கும்போதே பல பிரச்னைகள் வரும் அதனை சமாளிப்பதே கடினம்’ என கூறினார்.


இதனைக் கேட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் பலமாக கைத்தட்டி சிரித்தனர். விஜய்யுடன் இருக்கும் பிரச்னையை சமாளிக்க முடியாமல் சந்திரசேகர் திணறுவதையே இவ்வாறு கூறியிருக்கிறார் என பலர் தெரிவித்துவருகின்றனர்.


மேலும் படிக்க | இந்தியன் 2 படத்திற்கு பிறகு H. வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன்?


அதேசமயம், அரசியல் குறித்து எந்தவித கருத்தையும் விஜய் தெரிவிக்காதபோது ஒரு அரசியல் தலைவர் மேடையில் தன் குடும்ப பஞ்சாயத்தை சந்திரசேகர் எதற்காக பேச வேண்டுமென்றும் விஜய் ரசிகர்களில் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata