நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படம் நாளை வெளியாக இருக்கிறது. டிக்கெட் விற்பனை பெரும்பாலும் முடிந்துவிட்ட சூழலில் டிக்கெட் வாங்காதவர்கள் எப்படியாவது முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட வேண்டுமென்பதால் டிக்கெட்டுக்காக மும்முரமாக சுழன்று கொண்டிருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் ஜோராக நடைபெற்றது. இந்நிலையில் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பீஸ்ட் படத்தை வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.



இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாசமுள்ள பிள்ளைகளே வணக்கம். பீஸ்ட் படத்தை காண்பதற்கு ஒரு ரசிகனாக உங்களைப் போலவே நானும் காத்துக்கொண்டிருக்கிறேன். உங்களது வெற்றி கொண்டாட்டத்திற்கு எனது வாழ்த்துகள்” என பேசியுள்ளார்.


 



முன்னதாக, பீஸ்ட் பட ப்ரோமோஷனுக்காக விஜய்யை பேட்டி எடுத்த நெல்சன் எஸ்.ஏ. சந்திரசேகர் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த விஜய், ‘தந்தைதான் ஒரு குடும்பத்தின் வேர். கடவுளுக்கும் அப்பாவுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.கடவுளை நேரில் பார்க்க முடியாது. தந்தையை நேரில் பார்க்கலாம்’ என பதிலளித்திருந்தார்.



விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் கருத்து வேறுபாடு நிலவிவருவதாக பலர் கூறிய சூழலில் விஜய்யின் இந்த பதில் அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றதோடு, கருத்து வேறுபாடுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


மேலும் படிக்க | Sounds from the world of Beast - வெளியானது புதிய ப்ரோமோ


தற்போது விஜய்யின் கடவுளான எஸ்.ஏ.சி பீஸ்ட் படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதால் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


மேலும் படிக்க | பீஸ்ட் திருவிழா - விடுமுறை அளித்த தனியார் நிறுவனங்கள்; ஊழியர்களுக்கு ஜாலியோ ஜிம்கானா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR