நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த விழாவில், நடிகை சாய் பல்லவி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாய் பல்லவி:


தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் முலம் அறிமுகமான இவருக்கு அந்த படத்தின் கதாப்பாத்திரமான மலர் டீச்சர் கதாப்பாத்திரம் பெரிய ரீச்சை கொடுத்தது. இதையடுத்து அவர் தமிழிலும் தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் படங்களில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். 


ரசிகர்களுக்கு சாய் பல்லவி மீது எப்போதும் ஒரு தனி விருப்பம் உள்ளது. காரணம், இவர் இதுவரை கிளாமர் காண்பித்து படங்களில் நடித்ததில்லை. பெரிதாக மேக்-அப்பும் உபயோகித்ததில்லை. அது தனக்கு பிடிக்காது என்றும் பல நேர்காணல்களில் பேசியுள்ளார். இவர் இப்படி இயற்கை அழகுடன் இருப்பதால் ரசிகர்கள் பலர் சாய் பல்லவியை ‘நேச்சுரல் பியூட்டி’ என்றும் கூறி வருகின்றனர். 


தங்கைக்கு நிச்சயதார்த்தம்..


நடிகை சாய் பல்லவிக்கு, பூஜா கண்ணன் என்ற ஒரு தங்கை இருக்கிறார். பார்ப்பதற்கு சாயலில் சாய் பல்லவி போலவே இருக்கும் அவர், சித்திரை செவ்வானம் எனும் படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் அவர் சமுத்திரகனிக்கு மகளாக நடித்திருப்பார். அதன் பின்னர் சினிமாவில் பெரிதும் தலைக்காட்டாத பூஜா, சுய தொழிலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Viduthalai: விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!


பூஜா, வினீத் என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் வினீத்துடன் பூஜாவிற்கு திருமணம் ஆக உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் பரவியது. இதை அவர்கள் தங்களது சமூக வலைதள பதிவின் மூலமாக உறுதிப்படுத்தினர். இதையடுத்து, பூஜாவிற்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. வெகு சில நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் எளிமையான முறையில் நடைப்பெற்ற இந்த விழாவில் சாய் பல்லவி முன்னின்று அனைத்து வேலைகளையும் செய்தார். இந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், சாய் பல்லவி தனது தங்கையின் திருமணத்தில் அனைவருடனும் சேர்ந்து நடனமாடியுள்ளார். 


வைரல் வீடியோ..


வைரலாகும் அந்த வீடியோவில், மஞ்சள் புடவை கட்டியுள்ள சாய் பல்லவி தனது தங்கையுடனும், பிற குடும்பத்தினருடனும் இணைந்து நடனமாடுகிறார். 



இதை பார்த்த நெட்டிசன்கள், “சினிமாவில் மட்டுமல்ல..சாய் பல்லவி அனைத்து இடங்களிலும் நன்றாக ஆடுகிறார்” என பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சாய் பல்லவி, திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் பல மேடை நிகழ்ச்சிகளில் போட்டியாளராக இருந்துள்ளார். குறிப்பாக, பிரபல டான்ஸ் ஷோவான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த போட்டியாளராக இருந்துள்ளார். ‘ரெளடி பேபி’ பாடல் ஹிட் ஆவதற்கு பெரிய காரணமாக இருந்தது, சாய் பல்லவியின் நடனம் என்று கூட கூறலாம். 


மேலும் படிக்க | Sai Pallavi: களைக்கட்டிய சாய்பல்லவி தங்கையின் நிச்சயதார்த்தம்! வைரல் புகைப்படங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ