பிரபல நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் நடைபெற்றதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனவுக்கன்னி சாய் பல்லவி:
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தனி இடத்தை பிடித்த நடிகைகளுள் ஒருவர் சாய் பல்லவி. இவருக்கு, குறிப்பாக தமிழ் நாட்டில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இவர் நீலகிரி மாவட்டத்தில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்தவர், ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றவர். ஆனால் மருத்துவராகப் பதிவு செய்துகொள்ளாமல் தன் தாய்வழியாக நடனம் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தொலைக்காட்சி நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.


‘கஸ்தூரிமான்’, ‘தாம்தூம்’ திரைப்படங்களில் பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்த சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். தமிழகத்தில் அந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அவரின் கதாபாத்திரமான மலர் டீச்சர் என பலரும் சாய் பல்லவியை அழைக்க அரம்பித்தனர். இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். 


மேலும் படிக்க | த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது. இதுவரை 15 படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, குறுகிய காலத்தில் நிறைய பெயரை சம்பாதித்துள்ளார், இது ஒரு நடிகரின் வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனையாகும். 


சாய் பல்லவி ரகசிய திருமணம்:
இந்நிலையில் தற்போது சாய் பல்லவி திருமணம் செய்துக் கொண்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் சாய் பல்லவி மாலையுடன் இருக்கும் போட்டோ கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான பூஜையின் போது எடுக்கப்பட்டது. அதில் சாய் பல்லவியுடன் இருப்பது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகும். இந்த உண்மை தெரியாமல் பலர் தவறான தகவல்களை பதிவிட்டு வருகிறனர். ஆனால் இது போன்ற தவறான தாகவகளை பதிவிட வேண்டாம் என சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Sk21 மற்றும் NC23 அப்டேட்:
இதனிடையே தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் SK21 படத்தில் நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அதுமட்டுமின்றி இதைத் தொடர்ந்து இவர் நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்கும், இன்னும் பெயரிடாத படம், தற்போது NC23 என அழைக்கப்பட்டும் படத்திலும் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | "1000 கோடியை தாண்டி விடுமோ..?” ஜவான் படத்தின் வசூல் விவரம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ