14 ஆண்டுகளாக சோலோ ரிலீஸ்! எந்த ஹீரோவும் இவருடன் மோதவில்லை!
Tiger 3: சல்மான்கான் நடித்துள்ள டைகர் 3 படம் பல வருடங்களுக்கு பிறகு தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளது.
2023ல் பல படங்கள் ஹிட் அடித்துள்ளது. ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் 1000 கோடி வசூல் அள்ளியது. தற்போது விஜய் நடித்துள்ள லியோ படமும் வசூலில் அதிகரித்து வருகிறது. இன்னும் இந்த ஆண்டு முடிவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், பெரிய ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. ஷாருக்கானின் டன்கி படம், பிரபாஸின் சலாருடன் மோதவுள்ளது. அதே நேரத்தில் ரன்பீர் கபூரின் அனிமல் படம் விக்கி கௌஷலின் சாம் பகதூருடன் மோதவுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் தினத்தில் பல படங்கள் வெளியாக உள்ளது. ஆனாலும், சல்மான் கானின் படம் ஹிந்தியில் தனியாக எந்த ஒரு போட்டியும் இன்றி வெளியாகிறது. மேலும் சல்மான் கானின் படம் கடந்த 14 ஆண்டுகளாக ஹிந்தியில் சோலோ ரிலீசாக இருந்து வருகிறது. ஷாருக்கான், விஜய், அக்ஷய்குமார், பிரபாஸ் என எந்த நடிகரின் படமும் சல்மான் கானுடன் மோதவில்லை.
மேலும் படிக்க | லியோவில் விஜய்யுடன் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? ‘இந்த’ நடிகரின் மகள்தான்!
யாஷ் ராஜ் பிலிம்ஸின் தயாரிப்பில் சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது. தீபாவளிக்கு முன்னதாக நவம்பர் 12 அன்று படம் வெளியாக உள்ளது. பண்டிகை வாரமாக இருந்த போதிலும், டைகர் 3 உடன் மோதுவதற்கு வேறு எந்த பெரிய திரைப்படமும் வரவில்லை. உண்மையில், 2010ம் ஆண்டு சல்மான்கான் நடிப்பில் வெளியான தபாங்கிற்கு பிறகு அவரது அனைத்து படங்களும் சோலோ ரிலீஸாகவே வெளியானது.
2010 ஆம் ஆண்டு தபாங் 1 முதல் 13 ஆண்டுகளில் சல்மான் கான் நடிப்பில் வெளியான பாடிகார்ட், ஏக் தா டைகர், தபாங் 2, ஜெய் ஹோ, கிக், பஜ்ரங்கி பைஜான், பிரேம் ரத்தன் தன் பாயோ, சுல்தான், ட்யூப்லைட், டைகர் ஜிந்தா, ஹை, ரேஸ் 3, பாரத், தபாங் 3 மற்றும் கிசி கா பாய் கிசி கி ஜான் உள்ளிட்ட 16 படங்கள் வெளியாகி உள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து படங்களும் சோலோ ரிலீஸாகவே வெளியானது. பிரேம் ரத்தன் தன் பாயோ, சுல்தான் மற்றும் டைகர் ஜிந்தா ஹை ஆகியவற்றுடன் இணைந்து பல படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தைச் சுற்றியுள்ள பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மற்ற படங்கள் ஒத்திவைக்கப்பட்டன. சுவாரஸ்யமாக, இந்த காலகட்டத்தில் சல்மானின் டியூப்லைட் மற்றும் கிசி கா பாய் கிசி கி ஜான் ஆகியவை தவிர அனைத்து படங்களும் வெற்றி பெற்றன.
டைகர் 3 - தீபாவளி வெளியீடு
சல்மான் கடந்த 20 ஆண்டுகளில் அவரது கடைசி படமான கிசி கா பாய் கிசி கி ஜான் உட்பட தனது பெரும்பாலான திரைப்படங்களை ரம்ஜான் அன்று வெளியிட்டார். ஆனால் டைகர் 3 இப்போது தீபாவளியன்று வெளியாக உள்ளது. மனீஷ் ஷர்மா இயக்கிய, டைகர் 3 YRF ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும். கத்ரீனா கைஃப் மற்றும் இம்ரான் ஹாஷ்மி ஆகியோரும் நடிக்கும் இப்படத்தில் ஷாருக்கானின் கேமியோவும் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க | இறைவன் to சந்திரமுகி 2-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் புதுப்புது படங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ