செல்போன் பறிப்பு வழக்கு: சல்மான்கான் எடுத்த புது முடிவு!
சல்மான்கான், தனது பாதுகாவலர் நவாஸ் சேக்குடன் சேர்ந்து பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியதாகவும் அவரது செல்போனை பறித்ததாகவும் சர்ச்சை எழுந்தது.
சர்ச்சைக்கும் நடிகர் சல்மான் கானுக்கும் அப்படி என்னதான் பந்தமோ பாசமோ தெரியாது; அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது அவரது அடையாளமாகவே மாறிவிட்டது. ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கிய அவர் கடந்த 2019ஆம் ஆண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மும்பை அந்தேரியில் சல்மான் கான் சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரை சில பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சல்மான்கான், தனது பாதுகாவலர் நவாஸ் சேக்குடன் சேர்ந்து பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியதாகவும் அவரது செல்போனை பறித்ததாகவும் சர்ச்சை எழுந்தது.
மேலும் படிக்க| மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் விடுதலை
இது தொடர்பாக அந்த பத்திரிகையாளர் அந்தேரி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சல்மான்கான் மற்றும் அவரது பாதுகாவலர் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வகையில் போலீசார் விசாரணை அறிக்கையை அந்தேரி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவுகளான 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின்கீழ் குற்ற முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட நடிகர் சல்மான்கான் மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிடப்பட்டு விசாரணை இன்றைய தேதிக்கு (ஏப்ரல் 5) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சல்மான்கான் தற்போது மேல் முறையீடு செய்துள்ளார். அந்த வகையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
மேலும் படிக்க | ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சல்மான்கான் விடுதலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR