நடிகை சமந்தா சினிமா பயணத்தில் 12 வது ஆண்டை எட்டியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், 12 ஆண்டு கால சினிமா பயணத்தையொட்டி ரசிகர்களுக்காக உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மெசேஜில், 12 ஆண்டு கால பயணத்தில் பல மறக்க முடியாத தருணங்கள் இருப்பதாக கூறியுள்ள அவர், இந்த பயணத்தையும், தனக்கு கிடைத்துள்ள ரசிகர்களையும் நினைக்கும்போது ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்வதாக கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜீவா - சுந்தர்.சி படத்தில் இணைந்த விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி


மேலும், சினிமாவுடனான தனது பயணம் ஒருபோதும் நிறைவடையாது என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " நான் இன்று காலை கண்விழித்தபோது சினிமா துறையில் 12 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன் என்பதை உணர்ந்தேன். இந்த 12 ஆண்டுகளில் மின் விளக்குகள், கேமராக்கள், ஆக்ஷன் உள்ளிட்ட ஒப்பிடமுடியாத தருணங்கள் எத்தனை. ஆசிர்வதிக்கப்பட்ட இந்தப் பயணம் எனக்கு கிடைத்ததற்காகவும், உலகின் மிக அற்புதமான ரசிகர்களை பெற்றதற்காகவும் நான் என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். சினிமாவுடனான எனது பயணம் ஒருபோதும் நிறைவடையாது. என்னுடைய பயணம் வலிமையாகிக் கொண்டே இருக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.



சமந்தாவின் இந்தப் பதிவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்த சமந்தா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமண உறவை முறித்துக் கொண்டார். அதனால், அப்செட்டாக இருந்த அவர் கடந்த சில மாதங்களாக உலக நாடுகளுக்கு டூர் சென்றார். இந்தியா திரும்பிய பின்னர், புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். மேலும், விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. 


மேலும் படிக்க | விக்ரம் வேதா ஹிந்தியில் பர்ஸ்ட் லுக் வெளியீடு - ரசிகர்களின் ரியாக்ஷன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR