நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டி வருகிறது. பல மாநில அரசாங்கங்கள் தொற்று பரவுவதை தடுக்க பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தமிழகத்தில் இன்று புதிதாக 17,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,48,064 ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கொரோனா வைரஸ் (Coronavirus) அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ ஜிவி பிரகாஷ் நடித்த ’வாட்ச்மேன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே (Samyuktha Hegde) பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் தனது தந்தைக்கு ரெம்டிசிவிர் மருந்து தேவை என்றும் தனக்கு தொடர்பு உள்ளவர்களிடம் அந்த மருந்தை கேட்டுள்ளதாகவும் அந்த மருந்தை கிடைக்க உதவி செய்யவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் தனது பெற்றோரை வீட்டில் வைத்து சிகிச்சை செய்து வருகிறோம் என்றும் இருவரையும் தான் கவனித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பல ரசிகர்கள் அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR