தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் சனா கான். மலையாள படம் ஒன்றின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த இவர், மூன்று திரையுலகிலும் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம்பு பட நாயகி:


2008ஆம் ஆண்டு வெளியான சிலம்பாட்டம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சனா கான். இந்த படத்தில், பிரபல நடிகர் சிலம்பரசன்தான் இவருக்கு ஜோடி. சனா கானை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக சிலம்பரசன் ஸ்பெஷலாக ரெகமண்டேஷன் செய்ததாக கூறப்படுகிறது. இவர், அதன் பிறகு பரத்துடன்  ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் வாய்ப்பு கிடைக்க அதை நோக்கி பயணம் செய்தார். 


மேலும் படிக்க | பெற்ற மகளை ஒதுக்கி வைத்த ஜாக்கி சான்..! வீடில்லாமல் ரோட்டில் திரியும் மகள்..!


சினிமாவை விட்டு விலகல்:


சனா கான், ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் விளம்பர படம் என பிசியாக சுற்றிக்கொண்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாப் 3 போட்டியாளர்களுள் ஒருவராக வந்தார். சினிமாவில் சாதித்து கொண்டிருந்த சனா கான் திடீரென ஒரு நாள், தான் திரைத்துறையை விட்டு விலகுவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். தான், இறையாண்மையை நோக்கி செல்வதாகவும் சமூகத்திற்கு தேவையான எதையாவது செய்ய வேண்டும் என்றும் அவர் திரைத்துறையை விட்டு விலகியதற்கு பின்னர் தெரிவித்தார்.  பின்னர், 2020ஆம் ஆண்டில் சூர்த்தை சேர்ந்த முஃப்தி அனாத் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சனா, தற்போது சுயமாக அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். 


குழந்தை பிறந்தது:


சனா கானிற்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடவுள் எதையாவது கொடுக்கையில் அதை முழுமையாக கொடுப்பார். “தற்போது எங்கள் பயணத்தில் எங்களுடன் இருக்க இந்த பரிசை எங்களுக்கு கொடுத்துள்ளார். கடவுள் எங்களுக்கு ஆண் குழந்தையை ஆசிர்வதித்துள்ளார்” என்று சனா கான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சனா கானிற்கு அவரது கணவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இக்குழந்தைக்கு சனாகானின் குடும்பத்தில் வழிவழியாக வைக்கப்படும் பாரம்பரிய பெயர் ஒன்று சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


சர்ச்சை:


சில மாதங்களுக்கு முன்னர், சனா கானும் அவரது கனவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது சனா கான் கர்பமாக இருந்தார். அப்போது, சனாவின் கையை பிடித்து அவரது கணவர் வேகமாக சென்ற காட்சி இணையத்தில் வீடியோவாக வைரலானது. கர்பமாக இருக்கும் சனா கானை இப்படியா நடத்துவது என ரசிகர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து சனா கான் தனது இன்ஸ்டா பக்கத்தில் இதற்கு விளக்கம் தெரிவித்தார்.


சனா கான் விளக்கம்:


சர்ச்சையான அந்த வீடியா எடுக்கப்பட்ட போது தாங்கள் ஒரு நிகழ்ச்சியில் இருந்ததாகவும், தனக்கு மிகவும் சோர்வாக இருந்ததால் வீட்டிற்கு போக வேண்டும் என தனது கணவரிடம் கூறியதாகவும் சனா கான் தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனால்தான் தன் கணவர் தன்னை வேகமாக அழைத்து சென்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  இதையடுத்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 


மேலும் படிக்க | ‘டக்கர்’ to ‘ஃபர்ஹானா’ இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள மாஸ் திரைப்படங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ