சினிமா வேண்டாம்: ரஷியாவில் குடியேற நடிகை ஸ்ரேயா திட்டம்!!

நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற ஸ்ரேயா தற்போது தனது கணவருடன் ரஷியாவில் குடியேற ஸ்ரேயா திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Last Updated : Apr 7, 2018, 03:14 PM IST
சினிமா வேண்டாம்: ரஷியாவில் குடியேற நடிகை ஸ்ரேயா திட்டம்!! title=

நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற ஸ்ரேயா தற்போது தனது கணவருடன் ரஷியாவில் குடியேற ஸ்ரேயா திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.

இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

அதை தொடர்ந்து, ஸ்ரேயா மற்றும் ஆண்ட்ரே கோஸ்சீவ் திருமணம் மும்பையில் உள்ள ஸ்ரேயா வீட்டில் அவர்களின் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் மார்ச் 12 ஆம் நடந்தது. இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டதாகவும். பிரபலங்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்பட்டிருந்தது.

அதன் பின்னர், ஸ்ரேயா மற்றும் ஆண்ட்ரே கோஸ்சீவ் திருமணத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. 

அதை தொடர்ந்து, தற்போது தமிழில் அரவிந்த் சாமியுடன் நரகாசுரன் என்ற படத்தில் ஸ்ரேயா நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரேயாவுக்கு திருமணம் ஆனதால் வேறு எந்த புதிய படங்களும் இல்லை. திருமணம் காரணமாக அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.

இதனால் சினிமாவுக்கு தற்போது தள்ளி வைத்து விட்டு கணவருடன் ரஷியாவில் குடியேற ஸ்ரேயா திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

Trending News