ஜோதிக்கு ஹார்ட் அட்டாக், ஐஸ்வர்யாவை கொல்ல நடக்கும் சதி.. நடக்க போவது என்ன? சண்டக்கோழி சீரியல் அப்டேட்
Sandakozhi Today`s Episode Update: ஜோதிக்கு ஹார்ட் அட்டாக், ஐஸ்வர்யாவை கொல்ல நடக்கும் சதி.. நடக்க போவது என்ன? சண்டக்கோழி சீரியல் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சண்டக்கோழி. தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சண்டக்கோழி’ சீரியல்.
சண்டக்கோழி : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சண்டக்கோழி சீரியலில் ஐஸ்வர்யாவுக்கு அசோக்குடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் மறுபக்கம் விக்ரம், மகா ஆகியோர் விஜயுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, விக்ரமின் அம்மா ஜோசியரிடம் ஜோசியம் கேட்க அவர் விஜய் ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்தால் இந்த குடும்பம் இரண்டாக உடைந்து விடும் என அதிர்ச்சி கொடுக்க விக்ரமின் மாமா அந்த ஐஸ்வர்யாவை கொன்று விடலாம் என ஐடியா கொடுக்கிறான்.
இதனை தொடர்ந்து கங்கண கயிர் கட்டி விட்டால் வீட்டால் விட்டு வெளியே போக கூடாது என ஜோதி சொல்லிவிட ஐஸ்வர்யா விஜயை கோவிலில் சந்தித்து பேச திட்டம் போட்டு கோவிலுக்கு கிளம்ப ஜோதியும் கூட வருகிறார், அம்மாவுக்கு தெரியாமல் விஜயுடன் பேசும் ஐஸ்வர்யா எப்படியாவது நமக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என சொல்கிறாள்.
அதன் பின்னர் விக்ரம் விஜய் ஐஸ்வர்யா காதல் குறித்து ஐஸ்வர்யாவின் அண்ணனிடம் சொல்ல அவர்கள் உதவி செய்வதாக சொல்ல அபி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள், இதையெல்லாம் மீறி கல்யாண ஏற்பாடுகள் நடக்க ஜோதிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட அவள் தனியாக ஹாஸ்பிடலுக்கு செல்ல ஹார்ட் அட்டாக் என டாக்டர்கள் சொல்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? ஐஸ்வர்யா விஜய்க்கு கல்யாணம் நடக்குமா? அசோக் செய்ய போகும் சூழ்ச்சி என்ன என்ற கோணங்களில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சண்டக்கோழி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | ’நயன்தாராவே நகர்ந்து நிக்கனும்’ வெட்கத்தில் சொக்க வைக்கும் ஸ்ருதி ராஜ்
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சண்டக்கோழி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்
சண்டக்கோழி : சீரியலை எங்கு பார்ப்பது?
சண்டக்கோழி சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய அப்டேட்: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ