சூப்பர் சிங்கர் டைட்டிலை தட்டிச்சென்ற முதல் பெண்..! யார் அந்த வெற்றியாளர்?

Super Singer 9 Title Winner: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைப்பெற்றது. இதில், முதன்முதலாக ஒரு பெண் சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டிச்சென்றார்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 26, 2023, 08:36 AM IST
  • சூப்பர் சிங்கர் சீச்சன் 9 இறுதிப்போட்டி நேற்று நடைப்பெற்றது.
  • இதில் முதன்முறையாக ஒரு பெண் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.
  • அவருக்கு 60 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடு பரிசளிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் சிங்கர் டைட்டிலை தட்டிச்சென்ற முதல் பெண்..! யார் அந்த வெற்றியாளர்?  title=

தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்குவது சூப்பர் சிங்கர். 8 சீசன்களை கடந்து இந்த நிகழ்ச்சி சமீபத்தில் 9 ஆவது சீசனிற்குள் அடியெடுத்து வைத்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியின் டைட்டிலை முதன்முறையாக ஒரு பெண் தட்டிச்சென்றுள்ளார். யார் அந்த வின்னர்? 

சூப்பர் சிங்கர் 9: 

பாடும் திறமை உள்ள கலைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடையாளம் தரும் நிகழ்ச்சியாக இருப்பது, சூப்பர் சிங்கர். சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். இதி நடுவர்களாக பென்னி தயாள், ஸ்வேதா மேனன், உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றனர். மா.க.ப ஆனந்த் மற்றும் பிரியங்கா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தனர். இதன் இறுதிப்போட்டி நேற்று நடைப்பெற்றது. 

மேலும் படிக்க | Prithviraj Sukumaran: படப்பிடிப்பின் போது பிரபல நடிகருக்கு பெரும் விபத்து..! அச்சச்சோ என்னாச்சு?

இறுதிப்போட்டி: 

ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் ஆடிஷன் செய்யப்பட்டு நடந்த இந்த சீசன் கடைசியில் டாப் 20 போட்டியாளர்களிடம் வந்து நின்றது. இதில் ஃபைனலுக்காக 5 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அருனா சிவயா, பிரியா ஜெர்ஸன், ப்ரசன்னா ஆதிசேஷா, அபிஜித், பூஜா ஆகியோர்தான் அந்த இறுதிப்போட்டியாளர்கள். நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று விறுவிறுப்பாக நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் 5 போட்டியாளர்களும் தங்கள் திறமைகளை மேடையில் அரங்கேற்றினர். இதில், ‘இசை மின்னல்’ ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 5 போட்டியாளர்களுமே செம டஃப் கொடுத்ததால் யாரை வெற்றியாளராக தேர்வு செய்ய வேண்டும் என்பதில் நடுவர்களே குழம்பி போனார்கள். இறுதியில் போட்டியின் டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட்டார். 

இவர்தான் டைட்டில் வின்னர்: 

பலர் இந்த சீசனின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தாலும் ஆரம்பத்திலிருந்தே இதில் கலக்கி வருபவர், அருணா. இறுதிப்போட்டியில் தனது ஃபர்ஃபாமென்சிலும் தெரிக்க விட்டார், அருணா. இதைப்பார்த்து அசந்து போன நடுவர்கள் அவருக்கு ஃபுள் மார்க்ஸ் கொடுத்து டைட்டிலையும் பரிசுத்தொகையையும் கொடுத்துள்ளனர். இதனுடன் இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் அருணா சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தமாகியுள்ளார். 

2ஆவது மற்றும 3ஆவது இடங்கள்..

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 9 போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. அருணா நேற்றைய இறுதிப் போட்டியில் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்ல பிற போட்டியாளர்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். பலருக்கும் பிடித்த பிரியா ஜெர்சன் ரன்னர் அப் பட்டத்தை வென்றார். இன்னொரு போட்டியாளரான பிரசன்னா ஆதிசேஷா இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தை தட்டிச்சென்றார். அபிஜித் மற்றும் பூஜா ஆகியோர் மூன்றாவது இடத்தை பிடித்தனர். 

அருணாவிடம் சாதி கேட்டவர்கள்..

சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்ற அருணா, சில கோவில்களில் சென்று பாடல் பாடிவந்தார். நேற்றைய நிகழ்ச்சியில் விழா மேடையில் பேசிய அருணா, தான் கோவிலில் சென்று பாடும் போது சிலர் தன்னிடம் “நீங்கள் என்ன சாதி” என்று கேட்டதாக மனம் கலங்கினார். திறமையை வைத்து மேலே வருபவர்கள் இவ்வாறு பிரச்சனைகளை சந்திப்பதாக சிலர் மன வேதனை அடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | சரிகமப சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா..? அடுத்த இடம் யாருக்கு தெரியுமா? முழு விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News