தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சண்டக்கோழி. திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது விக்ரம் மகா மற்றும் விஜய் ஐஸ்வர்யா என எல்லாரும் மருவீட்டிற்கு வர மகாவின் குடும்பம் இவர்களை நல்லடிபடியாக கவனித்து கொள்கிறது. விதவிதமாக செய்யப்பட்டு இருக்கும் உணவு வகைகளை பார்த்து விக்ரம் வியக்கிறான்.  அதனை தொடர்ந்து இவர்களுக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்திருக்க பவர் கட் ஆகி எல்லாரும் மொட்டை மாடிக்கு சென்று பாட்டு பாடி சந்தோசமாக இருக்க ஏசிலேயே வாழ்ந்த விக்ரம் கரண்ட் இல்லனாலும் அதை இப்படியெல்லாம் சந்தோசமாக மாற்றலாமா என எண்ணுகிறான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கமலுக்கு உள்குத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதீப்! என்ன சொன்னார் தெரியுமா?


மறுநாள் விக்ரம் ஆபிஸ் போக மகா சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க இதையெல்லாம் பார்த்து மகா வீட்டில் மனதில் ஆசையை வளர்த்து கொள்ள கூடாது என முடிவெடுத்து உடனடியாக விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட சொல்கிறான்.  மகா இதை திசை திருப்ப முயற்சி செய்ய விக்ரம் தனது முடிவில் உறுதியாக இருக்கிறான், அபிநயாவுக்கு இவர்கள் மீது சந்தேகம் எழுந்து அந்த பைலை எடுத்து உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய மகா அதை பிடிங்கி விடுகிறாள், விக்ரம் மகா தான் பைலை திருடி விட்டதாக தவறாக நினைத்து கொள்கிறான். 


காரில் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டே செல்லும் போது ஒரு பெரிய விபத்தில் சிக்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சண்டக்கோழி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாவிற்கு பதில் ‘இவர்’ நடிக்க இருந்தார்! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ