சந்தியா ராகம்: ரகுராம் காலில் விழுந்த அப்பா.. சாரு எடுத்த சபதம்
Sandhya Raagam Serial Today march 20 Episode Update: நேற்றைய எபிசோடில் ரகுராம் இந்த கல்யாணம் நடக்காது என சொல்ல சாருவின் அப்பா அம்மா வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Sandhya Raagam Serial Today's Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரகுராம் இந்த கல்யாணம் நடக்காது என சொல்ல சாருவின் அப்பா அம்மா வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சாரு நான் சீனுவை தான் கல்யாணம் பண்ணிப்பேன் என ஒற்றைக்காலில் நிற்கிறாள். இதனால் சாரு அப்பா அம்மா வேறு வழி என்று மீண்டும் ரகுராமிடம் மன்னிப்பு கேட்க உள்ளச் செல்கின்றனர்.
ரகுராமிடம் தப்பு எங்களுடையது தான் நான் தான் அவசரப்பட்டு கோபப்பட்டு என்று சொல்ல சிவராமன் முடிந்தது முடிந்து போச்சு இனிமே இத பத்தி பேச வேண்டாம் என்று கோபப்பட வேறு வழியில்லாமல் சாருவின் அப்பா ரகுராம் காலில் விழுந்து நான் செஞ்ச தப்புக்காக என் பொண்ணை தண்டித்து விடாதீங்க என கெஞ்சுகிறார்.
இதனால் மனம் இறங்கும் ரகுராம் இவங்க பண்ண தப்புக்கு சாரி என்ன பண்ணுவ பிளான் பண்ண படி இந்த கல்யாணம் நடக்கட்டும் என சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அடுத்ததாக நான் யாரு உனக்குள் உட்கார்ந்து இருக்க அந்த வழியாக ரகுராம் செல்ல மாயா தனக்காக பேசியதற்காக நன்றி சொல்ல ரகுராமும் உன்னால தான் எனக்காக என் குடும்பம் எப்பவும் துணை நிற்கும்னு புரிஞ்சுகிட்டேன் அதுக்கு தேங்க்ஸ் என சொல்கிறார்.
அதே சமயம் இதனால் உன் மேல முழுசா நம்பிக்கை வந்துவிட்டது என்றால் அர்த்தம் இல்லை எனவும் சொல்ல மாயாகவும் எனக்கும் அப்படித்தான் என சொல்கிறாள். ரகுராம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் சாரு தன்னுடைய அப்பா அம்மாவிடம் நான் கல்யாணம் முடிஞ்சு இந்த வீட்டுக்கு வந்ததும் ஒவ்வொருத்தரையா இந்த குடும்பத்திலிருந்து பிரிப்பேன்.
அந்த ரகுராமை உங்க கால்ல விழ வைப்பேன் இது சத்தியம் என்று சபதம் எடுக்க அதைப் பார்த்து சாருவின் அப்பா அம்மா சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: தீபா வைத்த ட்விஸ்ட்.. ரியா கழுத்தில் தாலி கட்டிய ஆனந்த்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ