தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவராம் பின்தொடர்ந்து வந்ததால் மாயா தனலட்சுமியை அழைத்து சென்று கோவிலுக்குள் விட்டு விட்டு எஸ்கேப் ஆன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, வீட்டில் ரகுராம் தனத்தை எதுக்கு மாயாவுடன் டவுனுக்கு அனுப்பின என்று கோபப்பட்டு கொண்டிருக்க சிவராம் வீட்டிற்கு வர அவரிடம் மாயா தனம் குறித்து கேட்க அவங்க இன்னும் வீட்டிற்கு வரலையா என்று கேட்டதும் இருவரும் ஷாக் ஆகின்றனர். 


பிறகு சிவராம் மீண்டும் இவர்களை தேடி கிளம்ப ரகுராமும் மறுபக்கம் தேடி செல்கிறார். கோவிலில் தனம் மாயாவை காணவில்லை என தேடி தேடி அலைந்து எப்படி வீட்டிற்கு செல்வது என தெரியாமல் ஓரிடத்தில் உட்கார்ந்து அழுகிறாள், அங்கு வரும் புவனேஸ்வரி ஆட்களை விட்டு தனத்தை கடத்த சொல்கிறாள். 


மேலும் படிக்க | ‘சித்தா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?


இன்னொரு புறம் தப்பி வந்த மாயா ஆட்டோ ட்ரைவர் ஒருவரிடம் பஸ் ஸ்டாண்ட் போக வேண்டும் என உதவி கேட்க அவன் ரவுடிகளுக்கு போன் போட்டு தகவல் கொடுக்கிறான், இங்கே புவனேஸ்வரி ஆட்கள் தனத்தை தூக்க போக கடைசி நொடியில் ரகுராம் அங்கு வந்து தனத்தை காப்பாறுகிறார். மாயா எங்கே என்று கேட்க தனம் அவளை காணவில்லை என்று சொல்ல இவர் அவ பிளான் போட்டு வந்து தான்  ஓடி போய் இருப்பா என்று சொல்கிறார். 


அதனை தொடர்ந்து மாயா ஆட்டோவில் வந்து கொண்டிருக்க ரவுடிகள் 10 பேர் அவளை சுற்றி வளைக்க அவர்களிடம் ஒருவழியாக தப்பித்து ஓடி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: “ஐஷூ வெளியேறிதற்கு காரணம் இதுதான்..” நிக்ஸன் சொன்ன சர்ச்சை கருத்து!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ