இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக "சார்பட்டா" உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ளார். இந்த படம் வடசென்னை (North Chennai) பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டை பற்றிய சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) எடுக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சார்பட்டா பரம்பரை படம் திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் COVID-19 தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு  காரணமாக தாமதமானது. இதனால் நேரடியாக  OTT தளத்தில் வெளியீடலாமா என படக்குழு ஆலோசனை செய்து வந்தது. 


இதனையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளத்தில் (OTT) சார்பட்டா படம் வெளியாகிறது.


இது 1980-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்ட படம்  என தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 


ALSO READ | Arya 30: வேற லெவல் தோற்றத்தில் ஆர்யா - வெளியானது பா.ரஞ்சித்தின் அடுத்த அப்டேட்


நடிகர் ரஜினிகாந்தின் "காலா" பட வெற்றிக்குப் பின்னர் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பா.ரஞ்சித் (Pa Ranjith). இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு (Arya) ஜோடியாக துஷாரா (Dushara Vijayan) நடித்துள்ளார். 


மேலும் இப்படத்தில் பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர், துஷாரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


K9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR