சசிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஆவார். பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். இவரின் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளிவந்த 'சுப்ரமணியபுரம்' அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் நடிப்பில் வெளியான 'சுந்தரபாண்டியன்' படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. தற்போது சசிகுமார்,ஜோதிகா,சமுத்திரக்கனி,சூரி ஆகியோரின் நடிப்பில் வெளி வந்த 'உடன்பிறப்பே' படம் இவரின் தரத்தை மென்மேலும் உயற்றியது. இவரது படங்களில் பெரும்பாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் இடம்பெற்று இருக்கும். இவர் தற்போது ஒரு பிஸியான நடிகராக இருக்கிறார். தற்போது இவரின் வசம் எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு-2, நாநா உள்ளிட்ட பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.  இவற்றில் சில படங்களின்  படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ் செய்வதற்கு தயாரான நிலையில் இருக்கின்றன. 



இதனடிப்படையில், இயக்குனர் பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர்.மகன்’ தீபாவளி பண்டிகைக்கு ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்தே' படம் வெளியாகும் நிலையில், இந்த திரைப்படமும் அதே தினத்தில் OTT-ல் ரிலீசாக இருக்கிறது . மேலும் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள மற்றொரு படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’திரைப்படம் நவம்பர் 26-ம் தேதியன்று OTT-ல் அல்லாமல் நேரடியாக திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. 


இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் , சசிகுமாரின் படத்துக்கு சசிகுமாரின் மற்றொரு படமே போட்டியாக அமைந்து விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜவம்சம்’ என்கிற படமும் நவம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் சேதுபதியை தொடர்ந்து இவருக்கு தான் அடுத்தடுத்து படங்கள் வெளியாக போகிறது. இந்த மாதம் சசிகுமார் மாதம் என்று ஆகிவிடும் நிலையில் உள்ளது.


ALSO READ பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR