கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 48 மணி நேரமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று சரண் தெரிவித்துள்ளார். தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் SP.பாலசுப்பிரமணியம் சரண் நன்றி  தெரிவித்துள்ளார். SP.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளது நல்லதொரு அறிகுறியாகும் மகன் சரண் தெரிவித்துள்ளது.


SP.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீண்டும் நலமுடன் வர வேண்டும் என்று பிரபலங்கள், அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் பல்வேறு பிராத்தனைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் SPB-யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். 


ALSO READ | Viral: உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா.... இணையத்தை கலக்கும் சீரியல் சீன்..!



இது குறித்து SPB-யின் மகன் சரண் தமது சமூகவலைதளப் பக்கங்களில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் அனைவரது பிரார்த்தனையாலும் எஸ்பிபியின் உடல்நிலை கடந்த 48 மணிநேரமாக சீராக இருந்து வருகிறது.. அனைவரது பிரார்த்தனைக்கும் நன்றி" என தெரிவித்திருக்கிறார்.